இந்தியாவின் பதிலடியால் வழிக்கு வந்தது யு.கே.. இந்தியர்களுக்கான பயண கட்டுப்பாடு நீக்கம்.. திருப்பம்!
லண்டன்: இரண்டு டோஸ் கோவிஷீல்ட் வேக்சின் அல்லது யு.கேவால் அங்கீகரிக்கப்பட்ட வேக்சின் போட்ட இந்தியர்கள் இனி யு.கேவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று யுனைட்டட் கிங்டம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க கொரோனாவிற்கு பின்பாக விசா விதிகள் கடுமையாகி உள்ளது. அதேபோல் வளர்ந்த நாடுகள் பல கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை கொண்டு வந்து இருக்கின்றன. சில நாடுகள் வேக்சின் போட்டவர்களுக்கு கூட தனிமைப்படுத்துதல் விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளன.
அந்த வகையில்தான் இந்தியாவில் கோவிஷீல்ட் வேக்சின் போட்டுவிட்டு யுகே சென்றால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் யுகே கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்தது. அதாவது யு.கேவால் அங்கீகரிக்கப்பட்ட கோவிஷீல்ட் வேக்சின் போட்டு இருந்தாலும் கூட இந்தியராக இருந்தால் அவர்கள் யுகேவில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

எத்தனை நாட்கள்
அதன்படி இந்தியாவில் இருந்து வந்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், கொரோனா டெஸ்ட் சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று யுகே தெரிவித்தது. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் வேக்சின் போட்ட மக்களுக்கு மட்டும் தனிமைப்படுத்தல் விதி கிடையாது என்று யுகே தளர்வுகளை அறிவித்தது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிடம் மட்டும் இந்த பாரபட்சம் காட்டப்பட்டது. யுகேவின் இந்த விதியை இந்தியா கடுமையாக விமர்சனம் செய்தது.

கோரிக்கை
இந்தியாவிற்கு எதிரான கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்த வேண்டும் என்று யுகேவிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால் யுகே இந்தியாவின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதையடுத்து யு.கேவிற்கு பதிலடியாக இந்தியாவும் கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வந்தது. அதன்படி இந்தியா வரும் பிரிட்டிஷ் குடிமக்கள் அனைவரும் 10 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும், கொரோனா டெஸ்ட் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. வேக்சின் போட்டு இருந்தாலும் இந்த கட்டுப்பாடுகள் பிரிட்டிஷ் மக்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கம்
இந்த நிலையில்தான் இந்தியாவின் பதிலடியால் கலங்கிப்போன யு.கே தற்போது இந்தியர்களுக்கு விதித்த பயண கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது. நேற்று இதற்கான அறிவிப்பை இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் வெளியிட்டார். அதில், இந்தியாவில் இருந்து வரும் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் வேக்சின் போட்ட நபர்களுக்கு தனிமைப்படுத்துதல் விதி பொருந்தாது.

வேக்சின்
அதேபோல் யுகே மூலம் அங்கீகரிக்கப்பட்ட வேறு வேக்சின் போட்டு வரும் இந்திய நபர்களுக்கும் தனிமைப்படுத்துதல் விதி இனி பொருந்தாது. அவர்கள் இனி சிக்கல் இன்றி பயணம் மேற்கொள்ள முடியும். இந்த விதிமுறை அக்டோபர் 11ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் துருக்கி, கானா உள்ளிட்ட 37 நாடுகளுக்கு தனிமைப்படுத்துதல் விதியை யு.கே தளர்த்தி உள்ளது.

பதிலடி
இந்தியா கொடுத்த பதிலடி காரணமாக யு.கே பொதுமக்கள் இந்தியா வருவது கஷ்டமாக இருந்தது. யு.கேவில் இரண்டு டோஸ் வேக்சின் போட்டாலும் இந்தியாவில் தனிமைப்படுத்த வேண்டும் என்று விதிமுறை போடப்பட்டது. இந்தியாவின் இந்த பதிலடியை யு.கே எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில்தான் தனது முடிவில் இருந்து பின்வாங்கி தற்போது இந்தியர்களுக்கான பயண கட்டுப்பாட்டை யு.கே நீக்கி உள்ளது. இதனால் இந்தியாவும் கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications