பிரிட்டன் தேர்தல் முடிவுகள்.. படுதோல்விக்கு பின் ரிஷி சுனக் முதலில் சொன்னது இதுதான்.. பரபர பேச்சு
லண்டன்: பிரிட்டன் நாட்டில் நேற்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை அமைக்கிறது. இதற்கிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பிரிட்டன் நாட்டில் நேற்றைய தினம் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், இதில் தொழிலாளர் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும் சூழல் நிலவி வருகிறது.

பிரிட்டன் தேர்தல் முடிவுகள்: இதற்கிடையே பிரிட்டன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டார். அங்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வரும் போதிலும் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் சூழலே ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ள நிலையில், ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி சுமார் 60 இடங்களில் மட்டுமே வென்றுள்ளன.
இதன் மூலம் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொழிலாளர் கட்சியின் ஆட்சி அங்கு அமைகிறது. பிரிட்டன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான தோல்வி ரிஷி சுனக் கட்சிக்கு கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கன்ரச்வேடிவ் அரசு எடுத்த மோசமான முடிவுகளால் பிரிட்டன் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. அதுவே இந்த தோல்விக்குக் காரணமாகும்.
இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், ரிஷி சுனக் தனது கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தப் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.. இதற்காக அக்கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மரை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். அதிகாரம் அமைதியாகவும் சட்டப்பூர்வமான முறையிலும் கைமாறும்.
நானே பொறுப்பு: நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலத்தில் நாம் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்... இந்த தோல்விக்கு கன்சர்வேடிவ் கட்சியினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்" என்றார்.
என்ன காரணம்: பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் மோசமான பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. அதை கன்சர்வேடிவ் கட்சி முறையாகக் கையாளாமல் விட்டதே அவர்கள் தோல்விக்குக் காரணமாகும். இந்தச் சூழலில் தான் தொழிலாளர் கட்சி வென்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமராகப் பதவியேற்கிறார். அவருக்கு மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.
சவால்: பிரிட்டன் நாட்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வரி சுமை இந்தளவுக்கு அதிகமாக இருந்ததே இல்லை. அதேபோல நிகரக் கடன் கிட்டத்தட்ட வருடாந்திர பொருளாதார உற்பத்திக்குச் சமமாக உள்ளது.. பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது.. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிகிச்சை பெறும் தேசிய மருத்துவ சேவைகளில் சிகிச்சை பெறப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதையெல்லாம் புதிய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே இப்போது வல்லுநர்களின் கேள்வியாக உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications