விவசாயிகளுக்கு ஆதரவாக இறங்கிய ராணுவ டேங்க்! லண்டனில் உச்சக்கட்ட பதற்றம்! என்ன நடக்கிறது
லண்டன்: நமது நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 2020-2021 காலகட்டத்தில் மிகப் பெரியளவில் விவசாயிகள் போராட்டம் நடந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அதேபோன்ற ஒரு போராட்டம் இப்போது பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் ஆரம்பித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அங்குப் போராட்டத்திற்காக டிராக்டர்கள் திரண்டுள்ள நிலையில், அத்துடன் ராணுவ டாங்க் ஒன்றும் போராட்ட களத்திற்கு வந்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2020-2021 காலகட்டத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தியது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

போராட்டம்:
இப்போது கிட்டதட்ட அதேபோன்ற ஒரு போராட்டம் தான் பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆரம்பித்துள்ளது. அந்நாட்டு அரசுக்கு எதிராகப் பல நூறு டிராக்டர்களில் திரண்டுள்ள மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எதற்காக இந்த போராட்டம், இதில் ராணுவ டேங்க் வந்தது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டில் இப்போது தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருக்கிறது. கீர் ஸ்டார்மர் பிரதமராக இருக்கிறார். அவர் சமீபத்தில் புதிதாக விவசாயிகள் தொடர்பாகப் பரம்பரை வரி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதாவது ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்புள்ள விவசாய பண்ணைகளுக்கு 20% பரம்பரை வரி விதிக்கப் போவதாக அறிவித்தார்.
அதென்ன பரம்பரை வரி:
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் நமது நாட்டில் பெற்றோர் உயிரிழக்கும் போது, அவர்கள் சொத்து வாரிசுகளுக்கு வந்துவிடும். இதற்கு எந்தவொரு வரியும் இல்லை. இதுபோல பெற்றோரின் விவசாய பண்ணைகள், பிள்ளைகளுக்கு வரும் போது அதற்கு மொத்த சொத்தில் 20%ஐ வரியாகச் செலுத்த வேண்டும் என்பதே இந்த விதியாகும். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த வரியை அமலுக்குக் கொண்டு வரப் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.
இந்த வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரிட்டன் நாட்டில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மத்திய லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தை டிராக்டர்களுடன் அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் பல நூறு டிராக்டர்கள் நாடாளுமன்ற சதுக்கத்தை முற்றுகையிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாகன போக்குவரத்தும் மொத்தமாக முடங்கியுள்ளது.

ராணுவ டேங்க்:
இதற்கிடையே விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் போராட்ட களத்திற்கு ராணுவ டேங்கும் இணைந்துள்ளது. அதில் "எங்கள் விவசாயிகளுடன்" என்ற போர்டும் இருக்கிறது. அந்த ராணுவ டேங்க் யாருக்குச் சொந்தமானது. எப்படி திடீரென போராட்ட களத்திற்கு வந்தது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
விவசாயிகள் அழிந்து போவார்கள்:
அதேநேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், இந்த வரியை ரத்து செய்வதாகப் பிரிட்டன் அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். பரம்பரை வரி விதிக்கப்பட்டால் அது விவசாய குடும்பங்களை மொத்தமாக அழித்துவிடும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். தலைமுறை தலைமுறையாக விவசாயம் பார்த்து வரும் குடும்பங்கள், வரி செலுத்த நிலங்களை விற்க வேண்டி இருக்கும் என்றும் இதனால் விவசாயம் மெல்ல அழியும் என்றும் கூறி வருகின்றனர்.
கடந்தாண்டு தான் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி மற்றும் போலந்து உட்பட ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர். இப்போது ஓராண்டிற்குள் மீண்டும் அதேபோன்ற போராட்டத்தை விவசாயிகள் ஆரம்பித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications