பிரிட்டனில் ஊடுருவிய சீன உளவாளிகள்? "மாணவர்கள் தான் டார்கெட்.!" பிளானை கேளுங்கள் தலையே சுத்திடும்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இப்போது உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாகச் சீனா உருவெடுத்துள்ளது. அதேநேரம் சீனா திரைமறைவிலும் பல காரியங்களைச் சத்தமில்லாமல் செய்து வருகின்றன. அப்படியொரு சம்பவம் குறித்த தகவல் தான் இப்போது வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கல்வி நிறுவனங்களில் சீனா உளவு பார்ப்பதாக இப்போது ஒரு பரபர ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் படிப்பிற்காகப் பலரும் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள். நமது நாட்டு மாணவர்கள் போலவே சீன மாணவர்களும் தங்கள் படிப்பிற்காகப் பல உலக நாடுகளுக்குச் செல்கிறார்கள். அப்படி சீன மாணவர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் இருக்கிறது. இதற்கிடையே UKCT எனப்படும் இங்கிலாந்து-சீனா வெளிப்படைத்தன்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Britain China world

உளவு பார்க்க முயற்சி?

பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் சீன அரசுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து அந்த அறிக்கையில் உள்ள பாயிண்டுகள் பேசுபொருள் ஆகியுள்ளது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்குள் இருக்கும் சீன மாணவர்கள் தங்கள் நண்பர்களைக் கண்காணிக்கவும், அரசியல் விவாதங்களைக் கவனிக்கவும், அதாவது உளவு பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுவதாக அந்த ரிப்போர்டில் கூறப்பட்டுள்ளது.

கல்விச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான பிரிட்டன் புதிய சட்டத்தின் கீழ், பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய உறவுகளை மறுபரிசீலனை செய்ய அல்லது துண்டிக்க வேண்டும் என்று அங்குள்ள பல்கலைக்கழகங்களை இங்கிலாந்து அரசு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் சீன மாணவர்களின் கட்டணங்கள் மூலம் கிடைக்கும் பல கோடி பவுண்டுகள் பல்கலைக்கழகங்களுக்கு வருமானம் கிடைக்கும் நிலையில், அதை இழக்கும் சூழல் உருவாகும் என்பதால் பல்கலைக்கழகங்கள் தயங்கின. இந்தச் சூழலில் தான் இந்த விரிவான ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

பகீர் ரிப்போர்ட்

சீனா குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிஞர்கள் மற்றும் மாணவர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ரிப்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து நெகட்டிவாக கருத்து தெரிவிக்கும் நண்பர்களைக் கண்காணிக்கவும் அதை ரிப்போர்ட் செய்யவும் பிரிட்டனில் படிக்கும் தனது நாட்டு மாணவர்களைச் சீன அதிகாரிகள் வற்புறுத்துவதாக இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக கொரோனா தோற்றம், சின்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்கள் மீதான அணுகுமுறை, சீனத் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மீதான விமர்சனங்கள் ஆகியவை குறித்தும் கண்காணிக்கிறார்களாம்.

அச்சுறுத்தும் சீனா

சீன அதிகாரிகள் சொற்படி கேட்காத சீன மாணவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் கூறியுள்ளனர். பிரிட்டனில் இருப்பதால் சீன மாணவர்களைத் துன்புறுத்த முடியவில்லை என்றாலும் சீனாவில் உள்ள குடும்பத்தினருக்கு அதிகாரிகள் தொல்லை கொடுப்பதாக சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்ஃபியூசியஸ் இன்ஸ்டிட்யூட்கள்

மேலும், தன்னிடம் ஒரு சீன அறிஞர் நேரடியாகவே உங்களைக் கண்காணிக்கிறோம் எனக் கூறியதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் கூறுகிறார். இந்த சர்ச்சையின் மையமாக கன்ஃபியூசியஸ் இன்ஸ்டிட்யூட்கள் உள்ளன. இவை இங்கிலாந்தின் முக்கிய பல்கலைக்கழகங்களுக்குள் உள்ள சீன அரசு நிதியுதவி பெறும் மொழி மற்றும் கலாச்சார மையங்களாகும். இந்த மையங்கள் கல்வி பரிமாற்ற தளங்கள் என்று அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டாலும், இவை சீனாவின் கருவிகளாகச் செயல்படுகின்றன என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

எதிர்ப்புகளை ஒடுக்கவும், சீனா குறித்த பிம்பத்தை மாற்றவும் இவை பயன்படுத்தப்படுவதாகப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இத்தனை காலம் இந்த மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தன. இருப்பினும், கல்விச் சுதந்திரத்திற்கான புதிய சட்டத்தின் கீழ் இந்த கன்ஃபியூசியஸ் இன்ஸ்டிட்யூட்கள் விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

விசாரிக்கப்படும்

பிரிட்டனில் கடந்த வாரம் அமல்படுத்தப்பட்ட புதிய உயர்கல்வி சுதந்திரச் சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களில் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்., பேச்சு சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் கல்வி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் ஒழுங்குமுறை அமைப்புகளுக்குத் தரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ் கன்ஃபியூசியஸ் விசாரணை வளையத்திற்குள் வரும் எனத் தெரிகிறது.

இந்த விவகாரத்தை இங்கிலாந்து அரசும் கூட தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவே தெரிகிறது. சீனாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் இது குறித்து இங்கிலாந்து திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜாக்கி ஸ்மித் முக்கிய கருத்தைக் கூறியிருந்தார். அதாவது அவர், "கல்வி சுதந்திரம் என்பது பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது. இங்கிலாந்தில் உள்ள நபர்களை மிரட்டவோ, துன்புறுத்தவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ ஒரு வெளிநாட்டு அரசு மேற்கொள்ளும் எந்த முயற்சியும் சகித்துக்கொள்ளப்படாது" என்று அவர் கூறியிருந்தார். மேலும், பிரிட்டன் அரசும் விரைவில் இது குறித்து தனது விசாரணையை ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது.

மறுக்கும் சீன தூதரகம்

மேலும், சீனாவுக்கு எதிராக அமையும் சில ஆய்வுகளுக்கான நிதி மறுக்கப்படும் சம்பவங்கள் கூட பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் நடக்கிறதாம். இவை எல்லாம் அந்த UKCT அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் லண்டனில் உள்ள சீனத் தூதரகம், இந்தக் குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்றவை மற்றும் அபத்தமானவை" என்று மறுத்துள்ளது. சீனா எப்போதும் இதுபோன்ற விவகாரத்தில் தலையிடாது என்றும் பேச்சு சுதந்திரத்தையும், கல்வி சுதந்திரத்தையும் சீனா மதிக்கிறது என்று அந்நாட்டுத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+