இங்கிலாந்தில் மாஸ்க் அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகிறது..விரைவில் அறிவிக்கிறார் போரிஸ் ஜான்சன்!
லண்டன்: இங்கிலாந்தில் இனிமேல் மாஸ்க் அணிவது அவரவர் விருப்பம் என்று அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வர உள்ளது. இங்கிலாந்தில் பெருமளவு குறைந்து ஆறுதல் காட்டிய கொரோனா தொற்று தற்போது மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48.79 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்
இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் கொரோனா வேகம் காரணமாக இந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் ஊரடங்கு முறையை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மாஸ்க் அணிவது இங்கிலாந்தில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பபமாக அறிவிக்கப்படும் என்று கேபினட் அமைச்சர் ஜென்ரிக் தெரிவித்தார்.

வைரஸுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்
தடுப்பூசி திட்டத்தின் வெற்றிக்கு நன்றி, இப்போது அந்த கட்டுப்பாடுகளை திரும்பப் பெறவும், முடிந்தவரை இயல்பு நிலைக்கு திரும்பவும் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. நாம் இப்போது வேறுபட்ட காலகட்டத்திற்கு செல்ல வேண்டும், அங்கு நாம் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட பொறுப்பை எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்க வேண்டும்.

மாஸ்க் தனிப்பட்ட விருப்பம்
ஜூலை 19-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்படும்போது மாஸ்க் அணிவது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பமாக மாறலாம் என்று அமைச்சர் ஜென்ரிக் கூறினார். அடுத்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மாஸ்க் அணிவது அவரவர் விருப்பம் என்பது உள்பட பல்வேறு தளர்வுகளை அறிவிப்பார் என்று தி சண்டே டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.

மருத்துவர்கள் எச்சரிக்கை
டெல்டா வைரஸ் மாறுபாட்டின் விரைவான பரவல் மற்றும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதன் காரணமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருவதால், இரண்டு வார காலத்திற்குள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவதில் அர்த்தமில்லை என்று இங்கிலாந்து மருத்துவர்கள் அரசுக்கு எச்சரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications