உயிரை பறிக்கும் கேன்சரை கூட குணப்படுத்தும் "அதிசய மருந்து!" வியந்த ஆய்வாளர்கள்! இது எப்படி சாத்தியம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் மீசோதெலியோமா என்ற கொடூர வகையான கேன்சரை கட்டுப்படுத்தும் புதுவித மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது மருத்துவத் துறையில் மிகப் பெரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் மிகவும் கொடூரமான நோய்களில் ஒன்றாக கேன்சர் இருக்கிறது. இந்த நவீனக் காலத்தில் பல காரணங்களால் கேன்சர் தாக்குகிறது. கேன்சருக்கு மருந்துகள் இல்லாத நிலையில், அதைக் கண்டறியும் முயற்சியில் பல ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.

அப்படிதான் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது ஒரு புது வகை மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்த புது மருந்து நல்ல பலனைக் கொடுப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 UK Scientists finds Breakthrough in Deadly Cancer treatment with New Drug

புது மருந்து: முதற்கட்டமாக எலிகளிடம் இந்த சிகிச்சை முறையை சோதித்துள்ளனர். அதில் எலிகளின் வாழ்நாள் நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கேன்சர் டியூமருக்கு செல்லும் உணவைத் துண்டிப்பதன் மூலம் இந்த மருந்து அதைத் தடுக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற மருந்து உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்த மருந்தின் முடிவுகள் ஜமா ஆன்காலஜி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மீசோதெலியோமா என்பது ஒரு வகை புற்றுநோயாகும்.. நுரையீரலைத் தாக்கும் இந்த புற்றுநோய் பெரும்பாலும் குவாரி போன்ற பகுதிகளில் வேலை செய்வோருக்குத் தான் ஏற்படும். மிகவும் ஆபத்தான இந்த புற்றுநோய் தாக்கினால் உயிர்பிழைப்பதே கடினமாகும். ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் இந்த மீசோதெலியோமா கேன்சர் பாதிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் பல ஆயிரம் பேர் உயிரிழக்கவும் செய்கிறார்கள்.

சோதனை: எலிகள் மீதான சோதனை முடிந்த பிறகு மனிதர்கள் மீதும் முதற்கட்ட சோதனையை நடத்தியுள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் தைவான் ஆகிய ஐந்து நாடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அனைத்து நோயாளிகளும் ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை கீமோதெரபி பெறும் சூழல் இருந்தது. அவர்களில் பாதிப் பேருக்கு இந்த புதிய ADI-PEG20 (பெகார்கிமினேஸ்) மருந்து தரப்பட்ட நிலையில், மற்ற பாதிப் பேருக்குச் சோதனைக்காகச் சத்து மருந்தைக் கொடுத்துள்ளனர்.

மொத்தம் 249 பேர் இந்த சோதனையில் உட்படுத்தப்பட்டனர். கடந்த 2017 மற்றும் 2021க்கு இடையில் ஐந்து நாடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கீமோதெரபி மட்டும் எடுத்துக் கொண்டவர்களால் 7.7 மாதங்கள் மட்டுமே உயிர் பிழைக்க முடிந்த நிலையில், இந்த பெகார்கிமினேஸ் எடுத்தவர்கள் சராசரியாக 9.3 மாதங்கள் வரை உயிர்பிழைத்துள்ளனர்.

உதவுகிறது: இதன் மூலம் கீமோதெரபியுடன் இந்த புதிய பெகார்கிமினேஸ் மருந்தை எடுத்துக் கொள்வது நோயாளிகளுக்குப் பெரியளவில் உதவுவது தெளிவாகத் தெரிகிறது. கீமோதெரபி உடன் இந்த மருந்தை எடுத்துக்கொள்வது உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பது உறுதியாகத் தெரியும் நிலையில், இது தொடர்பாக அடுத்தகட்ட ஆய்வை ஆரம்பிக்க உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படி வேலை செய்கிறது: இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைவரும் 70 வயதைக் கடந்தவர்கள். அவர்கள் சுமார் 20 ஆண்டுகளாக கேசன்ருடன் போராடி வந்தவர்கள். ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக அந்த நோய் உடலில் ஏற்படுத்திய மாற்றத்தைக் கூட இந்த மருந்து காலி செய்கிறது, இந்த புதிய மருந்து ரத்த ஓட்டத்தில் அர்ஜினைன் அளவைக் குறைக்கிறது.

கேன்சர் செல்கள் உயிர்பிழைக்க இந்த அர்ஜினைன் முக்கியமானது. கேன்சர் செல்களால் அர்ஜினைனை தானாக உற்பத்தி செய்ய முடியாது. இந்த நேரத்தில் ரத்த ஓட்டத்தில் அர்ஜினைனையும் இந்த மருந்து பிளாக் செய்வதால் போதிய சத்து இல்லாமல் கேன்சர் செல்கள் மடிகிறது. அடுத்தகட்டமாக மீசோதெலியோமா கேன்சர் ஆரம்பக்கட்டத்தில் இருப்போருக்குச் சோதனை செய்ய ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+