நீ இறங்கி அடி கபிலா.. உக்ரைனுக்கு ரூ.24,841 கோடி ஒதுக்கிய பிரிட்டன்.. டென்ஷனில் அமெரிக்கா - ரஷ்யா
லண்டன்: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவமானப்படுத்தி வெளியே அனுப்பினார். இதையடுத்து அங்கிருந்து விமானத்தில் பிரிட்டன் பறந்த விளாடிமிர் ஜெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பேசிய நிலையில் உக்ரைன் ஆயுதம் தயாரிப்பதற்காக ரூ.24 ஆயிரத்து 841 கோடியை அள்ளி கொடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 3 ஆண்டுகளை கடந்து போர் தொடர்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இறங்கி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.

அதன்பிறகு ரஷ்யா, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவுதி அரேபியாவில் சந்தித்து பேசினர். இதில் உக்ரைன் அழைக்கப்படவில்லை. இதனால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி டென்ஷனானார்.
உக்ரைன் இன்றி நடக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவர் சீறினார். இதையடுத்து அவரை நேற்று முன்தினம் வெள்ளை மாளிகைக்கு அழைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமெரிக்கா சொல்வதை கேட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதுமட்டுமின்றி ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்கா சார்பில் 350 பில்லியன் டாலர் அளவுக்கு உக்ரைனுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இதனை திரும்ப தர வேண்டும். இதற்காக உக்ரைனின் உள்ள அரியவகை கனிமங்களுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடும் வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி பேசப்பட்டது. அதன்பிறகு டொனால்ட் டிரம்ப், ஜெலன்ஸ்கி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் இருதரப்புக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து விட்டது. அமெரிக்கா எங்களுக்கு உதவவில்லை. நாங்கள் தனித்து விடப்பட்டு இருக்கிறோம் என்று விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார். இதற்கு டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி கூறினார். இதனால் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவை குற்றம்சாட்டியதால் இனி டிரம்ப், உக்ரைனுக்கு உதவி செய்யமாட்டார் என்று சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் போரை உக்ரைன் எப்படி சமாளிக்க போகிறது? என்பது கேள்வி எழுந்துள்ளது.
இப்படியான சூழலில் தான் அமெரிக்காவில் இருந்து விமானத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேரடியாக பிரிட்டன் சென்றார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை அவர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யாவின் போர் நடவடிக்கை, உக்ரைன் போர் விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றி இருவரும் விவாதித்தனர். அப்போது எந்த சூழலிலும் பிரிட்டன் உக்ரைனை கைவிடாது. உக்ரைனுக்கு தொடர்ந்து பிரிட்டன் ஆதரவாக இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்தார்.
அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு ஆயுதம் தயாரிப்புக்காக பிரிட்டன் பல ஆயிரம் கோடிகளை அள்ளி கொடுத்துள்ளது. இதனை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உறுதி செய்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுதம் தயாரிப்பதற்காக பிரிட்டன் சார்பில் 2.26 பில்லியின் பவுண்ட் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 2.26 பவுண்ட் என்பது 2.84 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரானது. இதற்கான இந்திய மதிப்பு என்பது ரூ.24 ஆயிரத்து 841 கோடியாக உள்ளது.
இதன்மூலம் ரஷ்யாவை சமாளிக்க பிரிட்டன் சார்பில் ஆயுதம் தயாரிப்பதற்காக உக்ரைனுக்கு ரூ.24 ஆயிரத்து 841 கோடி என்பது வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடன் ஒப்பந்தத்தில் பிரிட்டன் சார்பில் பிரிட்டன் கருவூல தலைமை அதிகாரி ரச்சேல் ரிவிஸ், பிரிட்டன் நிதி அமைச்சர் செர்கி மார்சென்கோ ஆகியோரும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் என்பது பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரின் முன்னிலையில் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் படி முதற்கட்டமாக அடுத்த வாரம் நிதி என்பது உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளது. இதுபற்றி பிரிட்டன் சார்பில், ‛‛ஜி - 7 நாடுகள் 50 பில்லியன் அமெரிக்க டாலரை உக்ரைனுக்கு நிதியுதவியாக வழங்க முடிவு செய்தது. அதன் ஒருபகுதியாக முடக்கப்பட்ட ரஷ்யா சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் உக்ரைனுக்கு இந்த நிதி கடனாக வழங்கப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளாடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பிரிட்டனுக்கும், பிரிட்டன் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் தொடக்கம் முதலே உதவி செய்து வருகிறீர்கள். இப்போது ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் உக்ரைனில் ஆயுதங்கள் தயாரிக்கப்படும்'' என்று கூறியுள்ளார். உக்ரைனுக்கான இந்த கடனுதவியால் பிரிட்டன் மீது ரஷ்யா, அமெரிக்கா ஆகியவை டென்ஷனாகி உள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை பொறுத்தமட்டில் தொடக்கத்தில் அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல்
பிரிட்டன், பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நாடுகள் நேட்டோ அமைப்பில் உள்ளன. இந்த நேட்டோவில் சேர உக்ரைன் முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரஷ்யா போரையே தொடங்கியது. 2022ல் போர் தொடங்கிய சமயத்தில் அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்தார். இதனால் அவர் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தார். அதனை பின்பற்றி ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் இப்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வந்துள்ளார். இவர் ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகளை புறக்கணித்துள்ளார். அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் போரை நிறுத்த ரஷ்யாவுடன் தனியாக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார். மேலும் ரஷ்யாவுடன் இணக்கமாக செல்ல டிரம்ப் முடிவு செய்து வர்த்தகம் ரீதியான பேச்சுவார்த்தையையும் விரைவில் தொடங்கி உள்ளார். போருக்கு காரணமான அமைப்பான நேட்டோவில் இருந்தாலும் ஐரோப்பியா நாடுகளை அவர் புறக்கணித்துள்ளார். இது அமெரிக்கா மீது ஐரோப்பிய நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது உக்ரைன் - ரஷ்யா போரால் அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் இடையேயான உறவில் விரசல் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்தி டிரம்ப் அனுப்பியதுமே பிரிட்டன் சார்பில் ரூ.24, 841 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications