பிரிட்டன் அடுத்த மன்னர் இவர் தான்! எலிசபெத் மறைவை 400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியவரின் அடுத்த கணிப்பு
லண்டன்: ராணி எலிசபெத் மறைவை சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ராடாமஸ், அடுத்து யார் மன்னராக வருவார் என்பது குறித்த கணிப்புகளையும் விட்டுச் சென்று உள்ளார்.
பிரிட்டன் நாட்டின் மிக முக்கியமானது அந்நாட்டின் அரசு குடும்பம். அங்கு மக்களாட்சி இருந்தாலும் கூட அரசு குடும்பத்திற்கு என எப்போதும் தனி மரியாதை இருந்து கொண்டே தான் இருக்கும்.
இதன் காரணமாகவே பிரிட்டன் அரசின் தலைவராக அரசர் அல்லது ராணி இருந்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டன் அரசைத் தகுதிநீக்கம் செய்யும் அளவுக்கு ராணிக்கு அங்கு அதிகாரம் உள்ளது.

மறைவு
சுமார் 60 ஆண்டுகளாக அந்நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்தவர் ராணி எலிசபெத். பிரிட்டன் நாட்டில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்ற ராணி எலிசபெத்திற்கு வயது மூப்பு காரணமாக சில பிரச்சினைகளை எதிர்கொண்டு இருந்தார். அவரால் நீண்ட நேரம் நிற்கவும் நடக்கவும் கூட முடியவில்லை. இதையடுத்து பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்து அவர் பூரண ஓய்வில் இருந்தார்.

நல்லடக்கம்
ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் ராணி எலிசபெத் ஓய்வெடுத்து வந்த நிலையில், கடந்த செப். 8ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு அரசு குடும்ப ஆதரவாளர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியது. ராணி எலிசபெத் மறைவுக்கு 10 நாட்கள் அரசு முறை துக்கம் அங்கு அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 19ஆம் தேதி ராணி எலிசபெத் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கணிப்பு
காணி உயிரிழந்த நிலையில், அவருக்குப் பின் அவரது மூத்த மகன் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே ராணி எலிசபெத் மறைவை சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ராடாமஸ், அடுத்து யார் மன்னராக வருவார் என்பது குறித்த கணிப்புகளையும் விட்டுச் சென்று உள்ளார். அவரது பல்வேறு கணிப்புகளை உள்ளடக்கிய புத்தகம் ‘Nostradamus: The Complete Prophecies for the Future' என்ற பெயரில் கடந்த 2005இல் வெளியானது.

400 ஆண்டுகளுக்கு முன்பு
நோஸ்ராடாமஸ் தான் வாழ்த்த 16ஆம் நூற்றாண்டில் எதிர்காலம் குறித்து பல்வேறு கணிப்புகளைச் செய்து இருந்தார். அதையெல்லாம் தொகுத்துத்தான் 2005இல் அந்த புத்தகத்தை வெளியிட்டு இருந்தனர். 1555இல் எழுதப்பட்ட கவிதைப் புத்தகமான "லெஸ் ப்ரோபீடீஸ்"-இல் ராணி எலிசபெத் 2022இல் தனது 96 வயதில் உயிரிழப்பார் என்று நோஸ்ராடாமஸ் துல்லியமாகக் கணித்து இருந்தார்.

அடுத்த மன்னர்
இதனிடையே அடுத்த மன்னர் யார் என்பது குறித்தும் அவர் கணித்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அதில் மன்னர் சார்லஸுக்கு பின்னர் அவரது இளைய மகன் இளவரசர் ஹாரி மன்னராவார் என்று கூறப்பட்டு உள்ளது. இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் கடந்த ஆண்டு அரசு பதவியில் இருந்து விலகிய நிலையில், இந்த கணிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பரபர கணிப்பு
நோஸ்ராடாமஸ் கணிப்பின்படி, "மன்னரின் விவாகரத்தைப் பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள். இதன் காரணமாக மன்னர் சார்லஸை தகுதியற்றவர் என்று கருதுவார்கள். இதனால் மன்னரை தீவுகளில் இருந்து (பிரிட்டன் தீவு) மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவார்கள்.. யாருமே எதிர்பார்க்காத ஒருவர் அடுத்து மன்னராகப் பதவிக்கு வருவார்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும், இளைய மகன் ஹாரி மன்னராவார் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளது.

புத்தக விற்பனை
ராணியின் மறைவை அதுவும் 400 ஆண்டுகளுக்கு முன்னரே நோஸ்ராடாமஸ் கணித்தது எப்படி என அந்நாட்டு மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். ராணியின் மறைவுக்குப் பின்னர் நோஸ்ராடாமஸ் கணிப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தின் விற்பனை பல மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.

பிரிட்டன் மகாராணி
மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த வாரம் 19ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அங்கிருந்து தனியாக வாகனம் ஒன்றின் மூலம் வின்ட்சர் கோட்டைக்கு ராணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications