நைட் கிளப்பில் "கசமுசா".. மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா.. போரிஸுக்கு சிக்கல்.. ஆட்டம் காணும் அரசு?
இங்கிலாந்து பிரதமர் புதிய 2 அமைச்சர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்
லண்டன்: இங்கிலாந்தில், ஏற்கனவே 2 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, பிரதமர் போரிஸுக்கு அதிர்ச்சி தந்த நிலையில், தற்போது மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பிரதமர் போரிசுக்கு சிக்கல்கள் கூடியுள்ளன
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்பி, கிறிஸ் பின்ஷர் என்பவர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், கிறிஸ் மீது பகீர் புகார் ஒன்று கிளம்பியது.. கடந்த புதன்கிழமை இரவு, கிளப் ஒன்றில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் கிறிஸ் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின..

ஷாக் தகவல்
சொந்த கட்சியில் இருந்தே எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வெடித்து கிளம்பின.. இதை கிறிஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்... தொடர்ந்து பழமைவாத கட்சி எம்பி பதவியில் இருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்... ஆனாலும், ஒரு எம்பி, இவ்வளவு பெரிய தவறு செய்துள்ள நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தன.

பதவிகள்
பின்னர், இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாளவில்லை என்று சொல்லியே, இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.. இந்த ராஜினாமா சம்பவம் இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது..

பகிரங்க மன்னிப்பு
இந்த ரிஷி சுனக் யார் என்றால், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.. இப்போது விஷயம் என்னவென்றால், 2 பேர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், எதற்கும் அசராத போரிஸ், நதீம் சஹாவி என்பவரை நிதியமைச்சராகவும், ஸ்டீவ் பார்க்லே என்பவரை சுகாதார துறை அமைச்சராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.. முன்னதாக, கிறிஸ் அரசு பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று போரிஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

2 அமைச்சர்கள்
போரிஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, "கிறிஸ்டோபர் பின்ச்சரை ஹெச்.எம் ஹவுஸ்ஹோல்டின் பொருளாளராக நியமித்தது தவறு என்றே நினைக்கிறேன்.. அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதனால் மோசமாக பாதிக்கப்பட்ட எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. கொள்ளையடிக்கும் அல்லது தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் யாருக்கும் இந்த அரசாங்கத்தில் இடமில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

அடுத்த ஷாக்
எனினும், 2 அமைச்சர்களும், சம்பந்தப்பட்ட கிறிஸ்ஸை விட்டுவிட்டு, போரிஸ் மீது குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்தனர்.. போரிஸ் ஜான்சனுக்கு, கிறிஸ்ஸை பற்றி எல்லாமே தெரியும்.. ஆனாலும் அவர் அதை மறைக்கிறார்" என்று பகிரங்கப்படுத்திய நிலையில், ராஜினாமா செய்தனர்.. இதற்கு பிறகுதான், போரிஸ் 2 புதிய அமைச்சர்களை நியமித்து, தன்னுடைய அதிரடியையும் காட்டினார்.. போரிஸ் அறிவித்துள்ள 2 புதிய அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் இங்கிலாந்து அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த நிலையில், இன்னொரு ஷாக் நடந்துள்ளது.

ட்விஸ்ட்
மேலும் 2 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.. நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார துறை சஜித் ஜாவித் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.. 2 பேருமே சீனியர் அமைச்சர்கள் ஆவார்.. போரிசுக்கு இதனால் மேலும் சிக்கல் கூடிஉள்ளது.. ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இங்கிலாந்து சிக்கி கொண்டுள்ளது. இப்போது மறுபடியும் கொரோனா அங்கு வேகமெடுத்து கொண்டிருக்கிறது.. இதை சமாளிக்கவே போரிசுக்கு நேரம் போதாதபோது, தன்னுடைய அரசை எதிர்த்து அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளது போரிஸ் ஜான்சனுக்கு பேரிடியாக உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications