Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண்களே கவனம்! இந்த டைப் கார் ஓட்டுனா.. அந்த உறுப்பு சின்னதா இருக்க வாய்ப்பு அதிகம்.. பகீர் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இல்லற வாழ்க்கை குறித்தும் உடலுறவு குறித்தும் உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் ஒருவரின் ஆணுறுப்பிற்கும் அவர்களின் காருக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் சில பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

உடலுறவு குறித்த புரிதல் சமூகத்தில் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உலகெங்கும் பாலியல் உறவு குறித்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒவ்வொரு ஆய்விலும் ஒவ்வொரு புது புது கண்டுபிடிப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படித்தான் பிரிட்டன் நாட்டில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் லண்டன் கலேஜ்ஜில் நடத்தப்பட்ட ஆய்விலும் ஆய்வாளர்கள் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

எந்தவொரு மனிதனின் வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கை என்பது ரொம்பவே முக்கியம். இல்லற வாழ்க்கையில் ஒருவன் எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்க்கை இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும், ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை என்பது மன ரீதியாகவும் கூட மனிதர்களுக்கு பாசிட்டிவ்வாகவே இருக்கிறது. இருந்த போதிலும், உடலுறவு குறித்து தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களிலும் தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

 இல்லற வாழ்க்கை

இல்லற வாழ்க்கை

இதனால் திருமணமாகும் வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு தங்கள் மீதே அச்சம் அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் யுனிவர்சிட்டி ஆப் லண்டன் கலேஜ்ஜில் நடத்தப்பட்ட ஆய்வில் பொய்யான தகவல்கள் நமது மூளையை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைக் கண்டறியும் ஆய்வை நடத்தியுள்ளனர். பொதுவாக ஆண் உறுப்பு சின்னதாக இருக்கும் நபர்களுக்குத் தான் விலையுயர்ந்த ஸ்போட்ஸ் காரை வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும்.

 ஸ்போட்ஸ் கார்கள்

ஸ்போட்ஸ் கார்கள்


அதாவது சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களால் தங்களால் இணைகளைத் திருப்திப்படுத்த முடியாது என்று நினைக்கும் ஆண்கள் அதைச் சமாளிக்க விலையுயர்ந்த ஸ்போட்ஸ் கார்களை வாங்கிக் குவிப்பார்கள். அப்போதுதான் இவர்கள் பெரும் பணக்காரர்கள் என்று நினைத்து பெண்களுக்கு இவர்கள் மீது ஈர்ப்பு வரும் என்பது அவர்களின் நம்பிக்கை. இது நமது நாடுகளைக் காட்டிலும் மேற்குலக நாடுகளில் அதிகம் இருக்கும் நம்பிக்கை.

 ஆய்வு

ஆய்வு

இது தொடர்பாக தான் லண்டனில் அவர்கள் ஆய்வை நடத்தியுள்ளனர். 18 வயது முதல் 74 வயதான 200 ஆண்களிடம் இந்த ஆய்வை அவர்கள் நடத்தியுள்ளனர். அவர்களை 100, 100 பேராகப் பிரித்த ஆய்வாளர்கள்.. முதல் 100 பேரிடம் அவர்களின் ஆணுறுப்பு வழக்கத்தை விட பெரியதாக உள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால் அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேநேரம் மற்றொரு 100 பேரிடம் அவர்களின் ஆணுறுப்பு வழக்கத்தை விட சிறியதாக உள்ளதாகக் கூறியுள்ளனர்.

 இரண்டு க்ரூப்

இரண்டு க்ரூப்

எந்தவொரு மருத்துவ சோதனையையும் நடத்தாமல் அவர்கள் மொத்தம் பொதுவாக இப்படிக் கூறியுள்ளனர். இதைக் கேட்டவுடன் அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாம். துக்கத்திலேயே இருந்துள்ளனர். அதன் பிறகு இரு தரப்பினரிடமும் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதில் குறிப்பாக யாருக்கு விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் உள்ளிட்ட சில பொருட்களைப் பட்டியலிட்டு வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்று கேட்டுள்ளனர். அதில் ஆணுறுப்பு பெரியதாக மருத்துவர்கள் கூறிய ஆண்கள் ஸ்போர்ட்ஸ் கார் பக்கம் திரும்பக் கூடவில்லை.

 ஸ்போர்ட்ஸ் கார்

ஸ்போர்ட்ஸ் கார்

அதேநேரம் எந்த ஆண்களிடம் அவர்களின் ஆணுறுப்பு சிறியதாக இருந்ததாக ஆய்வாளர்கள் கூறினார்களோ.. அவர்கள் எப்படியாவது விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். அதாவது தங்கள் ஆணுறுப்பு சிறியதாக உள்ளதாக நினைக்கும் ஆண்கள் அனைவரும் விலையுயர்ந்த வாகனங்களை வாங்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் இல்லற வாழ்வில் எந்தளவுக்கு ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

 எதனால் பாதிக்கும்

எதனால் பாதிக்கும்

அதேநேரம் இதற்கு முன்பு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளிலும் ஆணுறுப்பிற்கும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்து இருந்தாலும் கூட, இதுபோன்ற பொய்யான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டே வருகிறது. அதேபோல ஆணுறுப்பைப் பெரிதாக்க என்று கூறியும் பல போலி மருந்துகள் சந்தைக்கு வருகின்றன.. இதுபோன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மது பிடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவை செக்ஸ் வாழ்க்கையைப் பாதிக்கவே செய்யும்

மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+