"தலை எல்லாம் திரும்பி.." ஜாம்பிகளாக மாறும் புறாக்கள்.. ரொம்பவே கொடூரம்! மனிதர்களுக்கு இது பரவுமா
லண்டன்: புறாக்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவும் நோய் ஒன்று புறாக்களை ஜாம்பிகள் போல மாற்றும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் கண்டறியப்படும் பறவை என்றால் அவை புறாக்கள் தான். புறாக்கள் தான் இருக்கும் இடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும்.
இதன் காரணமாகவே கிராமங்களிலும் புறாக்களால் வசிக்க முடியும்... முற்றிலும் நகரமயமாக்கப்பட்ட சென்னை போன்ற நகரங்களிலும் புறாக்களால் வசிக்க முடிகிறது.

புறாக்கள்
இப்படி புறாக்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. அங்கு நிலவும் குளிர்ச்சியான சூழலிலும் கூட புறாக்களால் எளிதாக வாழ முடிகிறது. இதனிடையே பிரிட்டன் முழுவதும் இப்போது பரவும் புதிய வகை தொற்று நோய் ஒன்று புறாக்களை ஜாம்பிக்களாக மாற்றுகிறது. புறா பாராமிக்சோவைரஸ் அல்லது நியூகேஸில் நோய் எனப்படும் இந்த கொடிய நோய்ப் பாதிப்பு ஜெர்சி இன புறாக்கள் மத்தியில் வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அறிகுறிகள்
புறா பாராமிக்ஸோவைரஸ் எனப்படும் இந்த நோய் நரம்பியல் பாதிப்பால் ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்படும் புறாக்களின் உடலில் தொடர்ந்து நடுக்கம் ஏற்படும். மேலும், அதன் கழுத்தும் தலைகீழாகத் திரும்பிவிடும். இதில் பாதிக்கப்படும் புறாக்களால் எப்போதும் பறக்க முடியாது. மேலும் இதன் மலமும் பச்சை நிறத்தில் மாறிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நோய் தாக்கிய பின்னர் புறாக்கள் உணவைச் சாப்பிடவும் சாப்பிடாதாம்.

ஜாம்பி போல
இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, கழுத்து தலைகீழாகத் திரும்பியுள்ள புறாக்களின் படங்கள் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய் எளிதாகப் பரவும் என்பதால் அங்குப் பிரிட்டனில் உள்ள அனைத்து பறவைகள் மத்தியிலும் இது பரவுமோ என்று அஞ்சப்படுகிறது. இதில் பாதிக்கப்படும் புறாக்கள் காப்பகங்களில் தங்க வைக்கப்படுகிறது. காப்பகங்களில் உள்ள பறவைகளின் கழுத்துகள் திரும்புவதாகவும் அவற்றால் நிற்கக் கூட முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

எப்படிப் பரவும்
புறாக்கள் உள்ளிட்ட பறவைகளுக்கு இது மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்ட பறவைகளின் மலம் உள்ளிட்ட எச்சங்களின் மூலமே இந்த நோய் மற்ற புறாக்களுக்குப் பரவுகிறது. இந்த நோயைக் குணப்படுத்தத் தனியாக மருந்துகள் எதுவும் இல்லை. சிகிச்சை மூலம் நோயின் தீவிர தன்மையைக் குறைத்து அவை உயிர் வாழும் வாய்ப்புகளை அதிகரிக்கலாமே தவிர, முழுவதுமாக குணப்படுத்த மருந்துகள் எதுவும் இல்லை.

கருணை கொலை
இதனால் காப்பகங்களில் புறாக்களின் நிலை மோசமடைந்தால் அவை கருணை கொலை செய்யப்படும். பொதுவாக ஈரப்பதம் அதிகம் இருக்கும் குளிர் காலங்களில் இந்த வைரஸ் எளிதாக உயிர் வாழும். அதாவது குளிர் காலத்தில் தான் இந்த வைரஸ் வேகமாகப் பரவும் வாய்ப்புகள் அதிகம். பிரிட்டனில் பல இடங்களில் இருக்கும் பறவைகளிடம் இந்த நோய்ப் பாதிப்பு இப்போது கண்டறியப்பட்டு உள்ளது.

மனிதர்களுக்கு ஆபத்தா
இந்த நோய் புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் மத்தியில் வேகமாகப் பரவும் என்றாலும் கூட, இதனால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை. மனிதர்கள் மத்தியில் இந்த நோய் பரவாது. அதேநேரம் பறவைகளைக் கையாளும் மனிதர்களுக்கு இது கான்ஜுன்க்டிவிடிஸ் போன்ற அலர்ஜி பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. மற்றபடி மனிதர்களுக்கு இது எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications