"நைஸா" ஓட்டலுக்குள் நுழைந்த ஜோடி.. "சைஸா" பண்ண காரியம்.. வாயை பிளந்து பார்த்த ஹோட்டல்.. அட கருமமே

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஹோட்டலுக்குள் நுழைந்த அந்த ஜோடியை, ஒட்டுமொத்த பொதுமக்களும் சேர்ந்து ரவுண்டுகட்டி பிடித்துவிட்டன.. என்ன நடந்தது? யார் இந்த ஜோடி.

இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.. அங்கிருக்கும் கிரேட் பிரிட்டனின் வேல்ஸ் என்ற பகுதியில் நிறைய ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.. இங்கிருப்பவை பெரும்பாலும், காஸ்ட்லி ஓட்டல்கள்தான்.

Who is this UK Couple and what are the Major Allegations from 5 Star Hotels Caught CCTV Footage

ஓட்டல்கள்: பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில், "Mega Feast" எனப்படும் விருந்துகள் நடைபெறுவது வாடிக்கையாகும்.. இந்த மெகா விருந்துகளில், வெறும் பணக்காரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.. இந்த மெகா விருந்துகளில் தங்களது குந்தைகளையும், குடும்பத்தினரையும் அழைத்து வருவது, ஒருவகையான கவுரவமாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில், ஆன் என்ற பெண்மணி இங்குள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் நுழைந்தார்.. தன்னுடன் கணவர் மெக்டொனாக், 4 வயது சிறுவனையும் கூடவே அழைத்து வந்திருந்தார்.

ஊழியர்கள்: குடும்பமாக இவர்கள் வந்ததால், ஓட்டல் ஊழியர்களும் விழுந்து விழுந்து கவனித்தார்கள்.. மெகா விருந்து ரகங்களை பார்த்ததுமே, இந்த 3 பேரும், வரிசையாக சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.. தங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ, அத்தனை அயிட்டங்களையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டேயிருந்தனர்.. ஓட்டலுக்குள் நுழைந்ததிலிருந்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவுமில்லை.. குடும்பமே அந்த சாப்பாட்டில் மூழ்கிவிட்டது..

ஒருவழியாக 3 பேருமே சாப்பிட்டு முடித்துவிட்டார்கள்.. ஆன் - மெக்டொனாக் தம்பதியும், அவர்களது மகனும் கைகளை கழுவி கொண்டார்கள்.. 3 பேரும் சாப்பிட்டு முடித்ததால், அங்கிருந்த வெயிட்டர்கள், பில் எடுத்து வந்து தந்தார்கள்..

ஆன் - மெக்டொனாக் தம்பதியினர் அந்த பில்லை வாங்கிக்கொண்டனர். பணம் கட்டுவதற்காக கிரெடிட் கார்டை எடுத்தனர்.. ஆனால், அந்த கார்டு திடீரென செயல்படவில்லை. அதனால், வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் காரிலிருந்து, இன்னொரு கார்டு எடுத்து வருகிறோம் என்று சொல்லிவிட்டு, சிறுவனையும் அங்கேயே உட்காரவைத்துவிட்டு, 2 பேரும் வெளியே சென்றார்கள்..

சிறுவன்: நீண்ட நேரமாகியும் தம்பதி கிரெடிட் கார்டு எடுத்து கொண்டு வரவில்லை.. சிறுவனும் நீண்ட நேரம் அங்கேயே இருந்ததால், எப்படியும் பெற்றோர் வந்துவிடுவார்கள் என்று ஓட்டல் நிர்வாகம் நினைத்தது.. ஆனால், கொஞ்ச நேரத்தில் அந்த சிறுவனையும் அங்கே காணவில்லை..

அதற்குபிறகுதான் தெரிந்தது வந்தவர்கள் தம்பதி கிடையாது.. ஆன் என்ற பெண்ணின் பார்ட்னர்தான் மெக்டொனாக்.. இவர்களுக்கு எங்கே போனாலும், இப்படித்தான் வயிறு முட்ட சாப்பிட்டு பில் தராமல் நழுவி விடுவார்களாம். குடும்பமாக இருந்தால், சந்தேகம் வராது என்பதால், இந்த சிறுவனை வாடகைக்கு அழைத்து செல்வார்களாம்..

காஸ்ட்லி கார்: பெரிய பெரிய ஓட்டல்களுக்கு செல்லும்போது, காரில் செல்வதாலும், குழந்தையுடன் வருவதாலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படுவதில்லை. இந்த தம்பதியினர் பல ஹோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு பில் தராமல் போய்விட்டதாக, போலீசுக்கு சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் சார்பில் புகார்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், கொலை கொள்ளை சம்பவங்களுக்கு நடுவே, இதெல்லாம் ஒரு விஷயமா? என்று போலீசார் இந்த புகார்களை கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டார்களாம்.

ஆன் - மெக்டொனாக் தம்பதியின் இந்த திட்டமிட்ட மோசடிக்கு ஒரு முடிவு கட்ட, ஓட்டல் நிர்வாகம் முடிவு செய்தது. அதனால், இதற்கு முன்பு எங்கெல்லாம் இந்த ஜோடி ஓசியில் சாப்பிட்டு, பில் கட்டாமல் சென்றதோ, அந்த ஹோட்டல்களில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கேட்டு பெற்றது.. சாப்பிடாமல் கம்பி நீட்டும் மொத்த வீடியோவையும் தொகுத்து வீடியோ தயார் செய்தது.

வீடியோ ஆதாரம்: இந்த ஆதாரத்ததை எடுத்து கொண்டு போலீசுக்கு போகாமல், பொதுமக்களிடம் சென்று உதவி கேட்டது ஓட்டல் நிர்வாகம். பொமக்கள் இதை பார்த்து கொந்தளித்த பிறகுதான், போலீசார் இந்த விஷயத்தில் தலையிட்டார்களாம்.. இப்போது, ஆன் - மெக்டொனாக் டுபாக்கூர் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தன்று ஓட்டலுக்குள் நுழைந்து ஒரே நாளில் மட்டும், இவர்கள் சாப்பிட்டதற்கு பில் எவ்வளவு வந்தது தெரியுமா? கிட்டத்தட்ட 1200 அமெரிக்க டாலர்களாம்.. அதாவது நம்ம ஊர் மதிப்புப்படி 1 லட்சம் ரூபாயாம். பில் தொகையை பார்த்ததுமே, கம்பி நீட்டிவிட்டார்கள்.

கைது: இப்படி ஒவ்வொரு ஏரியாவிலும், ஒவ்வொரு ஸ்டார் ஓட்டலிலும், ஃபுல் கட்டுகட்டிவிட்டு, லட்சக்கணக்கான பில்லை கட்டாமல் தப்பித்திருக்கிறார்கள்... ஆக, பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்தானே???

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+