"இது நல்லா இருக்கே.." 15 வருஷமா வேலைக்கே போகல.. ஆனா ஊதிய உயர்வு மட்டும் வேண்டுமாம்! என்ன மேட்டர்
லண்டன்: கடந்த 15 ஆண்டுகளாக விடுப்பில் இருந்து விட்டு சம்பளம் வாங்கிய நபர் ஒருவர், தனக்கு ஊதிய உயர்வை நிறுவனம் தரவில்லை என வழக்கு தொடர்ந்தது லண்டனில் நடந்துள்ளது.
உலகின் அனைத்து நாடுகளையும் கொரோனா பாதிப்பு வைத்துச் செய்துவிட்டது. உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா தொடங்கி எந்தவொரு நாடும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
இப்போது கொரோனா முடிந்துவிட்ட போதிலும் அது ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பல நாடுகளிலும் பல்வேறு துறைகளிலும் வேலையிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
லண்டன்: இதனிடையே பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் 2008ஆம் ஆண்டு முதல் sick leave எனப்படும் விடுப்பில் இருந்து வருகிறார். அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதாவது தனக்கு மட்டும் சம்பள உயர்வு தராமல் தனது நிறுவனம் பாரபட்சம் காட்டுவதாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இயன் கிளிஃபோர்ட் என்ற அந்த நபர் ஐபிஎம் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.. ஆனால் அவர் கடந்த 15 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு இருக்கிறாராம். 2013 முதல் 'மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்றவர்' (medically retired) என்றே அவர் சுயவிவர குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சம்பளம்: இந்தச் சூழலில் தான் வேலை செய்யாமல் இருந்த 15 வருடங்களாகத் தனது சம்பளம் உயர்த்தப்படாததால், தான் பாகுபாட்டுக்கு ஆளானதாகக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்காக இவர் ஏதோ சில ஆயிரம் சம்பளம் பெறுகிறார் என நினைக்காதீர்கள். அவர் இப்போது ஆண்டுக்கு 54,000 பவுண்டுகளுக்கு மேல் (சுமார் 55 லட்ச ரூபாய்) சம்பளமாகப் பெறுகிறார். அவருக்கு 65 வயது ஆகும் வரை அவர் சம்பளத்தைப் பெறுவார்.
ஆனால், பணவீக்கம் காரணமாகத் தனது சம்பளம் காலப்போக்கில் போதாமல் போகும் என்பதால் இந்த திட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்படும் ஊதியம் போதுமானதாக இல்லை என்று கூறி வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
என்ன நடந்தது: இயன் முதலில் செப்டம்பர் 2008இல் இந்த சிக் லீவில் சென்றார். 2013இல் அவர் இது குறித்து புகார் எழுப்பும் வரை அவர் சிக் லீவிலேயே இருந்தார். அவரது புகாரை விசாரித்த ஐபிஎம் நிறுவனம், அவருக்கு ஒரு சமரச பேக்கேஜை வழங்கியது. அதன்படி அவர் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். இந்தத் திட்டத்தின்படி அவர் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்.
இத்திட்டத்தின் கீழ், வேலை செய்ய முடியாத ஒரு நபர் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார். ஆனால் பணியாளராகவே தொடர்வார். அதேநேரம் அவர் வேலை செய்யத் தேவையில்லை. அவர் ஓய்வு பெறும் வரை அவருக்குச் சம்பளம் வழங்கப்படும். அதன்படி இரு தரப்பும் ஒப்புக் கொண்ட வருவாயில் 75% ஊதியமாக அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு: இதில் அவர் 72,037 பவுண்டுகளை ஊதியமாக ஒப்புக் கொண்டார். அதன்படி 2013 முதல் அவருக்கு 25% பிடித்தம் போக ஆண்டுக்கு 54,028 பவுண்டுகள் வழங்கப்படுகிறது. 2013 முதல் 30 ஆண்டுகள், அதாவது அவர் ஓய்வு பெறும் 65 வயதை அடையும் வரை இந்த ஊதியம் அவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் அவர் பிப்ரவரி 2022இல், ஊனமுற்றோர் பாகுபாடு குறித்த கோரிக்கைகள் தொடர்பாக ஐபிஎம் மீது தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், "பணி செய்ய முடியாத ஊழியர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதே திட்டத்தின் நோக்கம். ஆனால், சம்பள தொகை எப்போதும் உயர்த்தப்படாது என்பதன் மூலம் அந்த நோக்கமே சீரழிந்துவிடுகிறது" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
தீர்ப்பு: இருப்பினும், அவரது கோரிக்கைகளைத் தீர்ப்பாயம் நிராகரித்தது.. அவருக்கு போதுமான பலன் வழங்கப்படுவதாகத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. மேலும் நீதிபதி, "நிறுவனத்தில் ஆக்டிவாக இருக்கும் ஊழியர் ஊதிய உயர்வைப் பெறலாம்.. ஆனால் ஆக்டிவாக இல்லாத ஊழியர்கள் பெற முடியாது. இதில் வித்தியாசம் இருக்கிறது. இது இயலாமையால் வரும் பிரச்சினை எனக் கருத முடியாது. அந்த நபர் தனக்கு வழங்கப்படும் பலன் போதுமாக இல்லை எனப் புகார் அளித்துள்ளார்.
மேலும், தான் பாகுபாடு காட்டப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் நிறுவனம் போதுமான தொகைதான் அளிக்கிறது. 50,000 பவுண்டுகளின் மதிப்பு 30 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்தாலும், அது இன்னும் கணிசமான பலன்தான். இது குறைவான தொகை எனக் கூற முடியாது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications