சார்லஸ் முடிசூட்டு விழாவில் "திடீர்" மாற்றம்! உலகமே எதிர்நோக்கும் நிகழ்வில் சம்பவம்! ஏன் தெரியுமா
லண்டன்: பிரிட்டன் நாட்டின் மன்னராக கிங் சார்லஸ் முடிசூட்டும் விழா சில நாட்களில் நடக்கும் நிலையில், இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பிரிட்டன் நாட்டில் நீண்ட காலம் தலைமை பொறுப்பில் இருந்தவர் ராணி எலிசபெத்.. சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் ராணியாக இருந்த அவர், 10க்கும் மேற்பட்டோரைப் பிரதமர்களாகவும் நியமித்துள்ளார்.

உலகின் டாப் அதிகாரமிக்க நபர்களில் ஒருவராகவே ராணி எலிசபெத் இருந்து வந்தார். இவர் கடந்தாண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராகப் பொறுப்பேற்றார்.
மன்னர் சார்லஸ்: அதன் பிறகு இத்தனை காலமாக அவரே அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறார். இருப்பினும், இன்னும் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா எதுவும் நடக்கவில்லை. மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா வரும் மே 6ஆம் தேதி நடக்கவுள்ளது. 70 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் முடிசூட்டு விழா என்பதால் ஒட்டுமொத்த பிரிட்டனும் இதை கோலாகலமாகக் கொண்டாடத் தயாராகி வருகிறது. உலகெங்கும் இருந்து பல டாப் தலைவர்கள் இதில் கலந்து கொள்ளும் நிலையில், இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே அடுத்து வாரம் நடக்கும் முடிசூட்டு விழாவில் பல மதங்கள் மற்றும் பல மொழிகள் இருக்கும். பிரிட்டனில் பல தரப்பு மக்களும் வாழ்ந்து வரும் நிலையில், இவை அனைவரையும் ஒருங்கிணைக்கும் நபராகத் தான் இருக்க முடியும் என்பதைக் காட்ட கிங் சார்லஸ் ஆர்வமாக உள்ளார். இதன் காரணமாகவே முதல் முறையாக இங்கிலாந்து சர்ச் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
திடீர் மாற்றம்: அதன்படி இந்து, புத்த, யூத, முஸ்லீம் மற்றும் சீக்கிய தலைவர்களும் இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்பார்கள் என்று கேன்டர்பரி பேராயர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த முடிசூட்டு விழாவில் முதன்முறையாகப் பெண் பிஷப்புகளும் பங்கேற்க உள்ளனர். அத்துடன் வெல்ஷ், ஸ்காட்டிஷ் கேலிக், ஐரிஷ் கேலிக், ஆங்கிலத்திலும் பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகளும் இடம்பெற்றிருக்கும்.
இது குறித்து இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் பேராயர் ஜஸ்டின் வெல்பி கூறுகையில், "இப்போது பிரிட்டன் நாட்டில் பல தரப்பு மக்களும் வசிக்கிறார்கள். நமது சமகால சமுதாயத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் சேவை இருக்கும். நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த முடிசூட்டு விழாவை நடத்த உள்ளோம்" என்றார். 70 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் முடிசூட்டப்பட்டபோது இருந்ததை விடப் பிரிட்டன் இப்போது அதிக பன்முகத்தன்மை கொண்டிருக்கிறது.
எதற்கு இப்படி: அப்படியொரு நாட்டில் 1,000 ஆண்டுகள் பழமையான முடியாட்சி இன்னும் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த முடிசூட்டு விழா நடக்கிறது. சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் உச்ச தலைவராக மன்னர் தான் அங்கே இருக்கிறார். இருப்பினும், பிரிட்டனில் சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பின் படி 50% குறைவானவர்கள் மட்டுமே தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த முடிசூட்டு விழாவில் பல நூற்றாண்டுகளாக புதிய மன்னர்கள் மற்றும் ராணிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட போது பின்பற்றப்படும் நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளது. இதில் மிகவும் புனிதமான பகுதியாக, கேன்டர்பரியின் பேராயர் மன்னரை எண்ணெய்யால் அபிஷேகம் செய்வார்.. இந்த நேரத்தில் சார்லஸை ஒரு திரை மறைக்கும்..
அப்போது மதகுருமார்களின் சில மூத்த உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இந்த எண்ணெய் அபிஷேகம் டிவியில் வராது.. மேலும், இவை அங்கே அபேயில் உள்ளவர்களிலேயே பெரும்பாலானோருக்குத் தெரியாது.
பொறுப்பேற்கும் மன்னர்: இந்த நிகழ்வுக்குப் பின் திரை அகற்றப்படும்போது, மக்களுக்குச் சேவை செய்வதற்குப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒருவராக மன்னர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார். இதைத் தொடர்ந்து முடிசூட்டு அலங்காரம், மன்னரின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளைக் குறிக்கும் செங்கோல் உள்ளிட்ட புனித பொருட்கள் அவருக்கு வழங்கப்படும்.
மாறி வரும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இதில் இந்து, யூத, முஸ்லீம் மற்றும் சீக்கிய தலைவர்களும் கிறிஸ்தவ அடையாளங்கள் இல்லாத பொருட்களை மன்னருக்கு வழங்குவார்கள். அதன் பின்னர் "God Save the King" என்று வரி அபேயில் எதிரொலிக்கும்.
அதைத் தொடர்ந்து ராணி கமிலா அபிஷேகம் செய்யப்படுவார். முன்னதாக 1937ஆம் ஆண்டில் ராணி எலிசபெத் தாய்க்கும் இதுபோல நடத்தப்பட்டது. அதேநேரம் மன்னரைப் போல இவை திரைகளால் மறைக்கப்பட்டிருக்காது. சார்லஸ் லண்டன் தெருக்களில் ஊர்வலம் செல்வதற்குச் சற்று முன்பு, அனைவரும் அவருக்கான வாழ்த்துக்களை வழங்குவார்கள். இதற்காக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications