லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்கள் யாருமே பேண்ட் போடல.. கூடவே வந்த பாய்ஸ்.. ஓ இதுதான் மேட்டரா! லண்டனில் நடந்த அந்த சம்பவம்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டியூப் ரயில்களில் திடீரென பலரும் பேண்ட் அணியாமல் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான படங்கள் நெட்டிசன்களை குழப்பிய நிலையில், அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நம்மை வீடுகளிலேயே இருக்க வைத்துவிட்டது. கொரோனா வேக்சின் தொடங்கி பலகட்ட நடவடிக்கைக்குப் பின்னரே இப்போது நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறோம்.

அதேபோல கொரோனாவுக்கு முன்பு உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வினோத பழக்கங்களும் கூட இப்போது மீண்டும் திரும்பி வருகிறது. அப்படித்தான் லண்டனில் ஒரு வினோதமான பழக்கத்தை கடும் குளிரைப் பொருட்படுத்தாமல் அங்குள்ள மக்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

 எலிக்கு என்ன திமிர் பாருங்க.. 19 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டதாம்.. சென்னை போலீஸ் பதிலால் நீதிபதி ஷாக் எலிக்கு என்ன திமிர் பாருங்க.. 19 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டதாம்.. சென்னை போலீஸ் பதிலால் நீதிபதி ஷாக்

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டனில் இப்போது கடுமையான குளிர் காலம் நிலவி வருகிறது. இதனால் நல்ல இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு தான், லண்டன்வாசிகள் வீடுகளை விட்டே வெளியே வருவார்கள். ஆனால், இப்போது அங்கு புதிய டிரெண்ட் ஆரம்பித்துள்ளது. இதற்கு லண்டன்வாசிகளில் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர், இது கடும்குளிரில் தேவையில்லாத வேலை என்பதையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அப்படி லண்டன் ரயில்களில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

பேண்ட் போடவில்லை

பேண்ட் போடவில்லை

நமது ஊரில் எப்படி மெட்ரோ இருக்கிறதோ அதேபோல லண்டனிலும் நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் டியூப் எனப்படும் நிலத்திற்கு அடியே இயங்கும் ரயில்கள் இயங்கி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல கடும் குளிரில் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்தனர். ஆனால், அவர்களிடம் பேண்ட் மட்டும் மிஸ்ஸிங். ஆம், அவர்களில் யாருமே பேண்ட் மட்டும் போடவில்லை. கீழே உள்ளாடைகளை மட்டும் அணிந்தவாறு அவர்கள் ரயிலில் ஏறினர்.

என்ன காரணம்

என்ன காரணம்

ஏதோ ஒரு சிலர் மட்டும் இப்படி வந்து ரயிலில் ஏறவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்படி பேண்ட் அணியாமல் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு ரயிலில் பயணித்தனர். இதை அவர்கள் "நோ டிரவுசர் டியூப் ரைடு" என்று அழைக்கிறார்கள். 12ஆவது ஆண்டாக இந்த "நோ டிரவுசர் டியூப் ரைடு" முன்னிட்டு அவர்கள் இப்படி பேண்ட் போடாமல் ரயில்களில் பயணித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பழக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இப்போது அதை ஆரம்பித்துள்ளனர்.

எப்படி தொடங்கியது

எப்படி தொடங்கியது

இதை ஸ்டிஃப் அப்பர் லிப் சொசைட்டி என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பெரும்பாலான வினோத பழக்கங்களைப் போலவே இதுவும் அமெரிக்காவில் தான் தொடங்கியது. கடந்த 2002இல் அங்குள்ள நியூயார்க்கில் சிலர் பேண்ட் அணியாமல் ரயில்களில் பயணித்தனர். லண்டன் ரயில்கள் எப்படி டியூப் என்று அழைக்கப்படுமோ.. அதேபோல நியூயார்க் ரயில்கள் சப்வே என்று அழைக்கப்படும். நோ பேண்ட் சப்வே ரைட் என்ற பெயரில் அவர்கள் பேண்ட் போடாமல் நியூயார்க் ரயில்களில் பயணித்துப் பரபரப்பைக் கிளப்பினர்.

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

பொதுவாக அங்குக் கடுமையான குளிர்காலம் நிலவும்போது தான் இதை அவர்கள் செய்வார்கள். இதன் ஐடியா என்னவென்றால், கடுமையான குளிர் இருக்கும்போது, கீழே உள்ளாடைகள், ஷூக்கள் மற்றும் காலுறைகளை மட்டும் அணிந்துகொண்டு ரயிலில் பயணம் செய்ய வேண்டாம். மேல் வழக்கமான குளிர்கால ஆடைகளை அணிந்து கொள்ளலாம். பேண்ட் அணியாததால் குளிர் எல்லாம் தெரியவில்லை என்பதைப் போல காட்டிக் கொண்டு பயணிகள் பயணிக்க வேண்டுமாம். கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 3 ஆண்டுகளாக இதை யாரும் கடைப்பிடிக்கவில்லை.

ஆண்கள் பெண்கள்

ஆண்கள் பெண்கள்

இப்போது கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள்.. லண்டன் ரயில் நிலையங்களில் முழுக்க இப்படி கீழே பேண்ட் அணியாதவர்களால் நிரம்பியுள்ளன. இப்படி பேண்ட் போடாமல் பயணித்தவர்களில் சுமார் 40% பேர் பிரிட்டன் நாட்டை சேராதவர்கள் ஆகும். மேலும், இதில் பங்கேற்றவர்களில் சுமார் 50% பெண்கள் என்றும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ரூல்ஸ் வேற இருக்காம்

ரூல்ஸ் வேற இருக்காம்

இது குறித்து அந்த அமைப்பின் இவான் மார்கோவிச் கூறுகையில், "இதில் பங்கேற்பவர்களுக்கு சில எளிய ரூல்ஸ் உள்ளது. முதலில் கவர்ச்சியான அல்லது. குறுகிய உள்ளாடைகளுக்கு அனுமதியில்லை. இதைப் பார்க்கும் மக்கள் சிரிக்க வேண்டும் என்பதை நோக்கமே தவிர.. முகத்தைச் சுளிக்க வைப்பது நோக்கம் இல்லை.. முடிந்தவரை யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.. உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு வந்து போட்டோ எடுத்துக் கொண்டு இருக்கக் கூடாது. வழக்கமான நாளை போல பணிகளைச் செய்ய வேண்டும்" என்றார்.

English summary
No Trousers Tube Ride is conducted on London after 3 years of Coronavirus pandemic: London is trending with No Trousers Tube Ride.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X