அவதூறாக பேசுகிறார்.. ராகுலுக்கு எதிராக இங்கிலாந்தில் வழக்கு போட போகிறேன்.. பாய்ந்து வந்த லலித் மோடி
லண்டன்: நீதிக்கு பயந்து தப்பியோடி விட்டதாக ராகுல் காந்தி கூட்டாளிகளும்.. சிலரும்... மீண்டும் மீண்டும் சொல்வதை நான் பார்த்தேன். ஆனால் எனக்கு எதிராக எப்போது குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது. ஊழல் மற்றும் நிதி மோசடியில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறேன் என்று லலித் மோடி ட்விட் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து பேசியது சர்ச்சை எழுந்தது.
இந்தியாவில் நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது.

ராகுல் காந்தியின் எம்பி பதவி
இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

வழக்கு தொடர போவதாக
காங்கிரஸ் கட்சியும் மத்தியில் ஆளும் பாஜக அரசின், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியே ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என சாடியுள்ளது. ராகுல் காந்தி மீதான நடவடிக்கை இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஊழல் மற்றும் நிதி மோசடியுடன் தன்னை தொடர்பு படுத்தி பேசும் ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்தில் வழக்கு தொடர போவதாக லலித் மோடி தெரிவித்துள்ளார்.

லலித் மோடி பேச்சு
ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடி நிதி முறைகேடு புகாரில் சிக்கினார். இதையடுத்து, இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனில் 2010-ஆம் ஆண்டு முதல் லலித் மோடி வசித்து வருகிறார். இந்த நிலையில், தான், ராகுல் காந்திக்கு எதிராக ஆவேசமாக தனது ட்விட்டரில் லலித் மோடி பதிவிட்டு இருக்கிறார். இது தொடர்பாக லலித் மோடி கூறுகையில், "நீதிக்கு பயந்து தப்பியோடி விட்டதாக ராகுல் காந்தி கூட்டாளிகளும்.. சிலரும்... மீண்டும் மீண்டும் சொல்வதை நான் பார்த்தேன்.

எப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது
எனக்கு எதிராக எப்போது குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது. ஊழல் மற்றும் நிதி மோசடியில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறேன். வலுவான ஆதாரங்களுடன் வருவார் என நம்புகிறேன். தன்னை (ராகுல் காந்தி) முழு முட்டாளாக ஆக்கிக்கொள்வதை பார்ப்பதை எதிர்பார்த்து இருக்கிறேன்" என்று சாடியுள்ளார்.

வெளிநாடுகளில் சொத்துக்கள் எப்படி
மேலும் கமல்நாத் உள்பட சில காங்கிரஸ் தலைவர்களின் பெயரை வெளியிட்டுள்ள லலித் மோடி, இவர்களுக்கு எல்லாம் வெளிநாடுகளில் சொத்துக்கள் வந்தது எப்படி என்றும் 15 ஆண்டுகளில் ஒரு பைசா எடுத்ததாக தனக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் 100 பில்லியன் டாலர்களை ஈட்டும் உலகின் பெரிய விளையாட்டு நிகழ்வை நான் உருவாக்கியதுதான் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications