நான்கே ஆண்டுகள்.. 1 லட்சம் கிராமங்களுக்கு மின்சார வசதி.. அதிரடி பாய்ச்சலில் உ.பி. அரசு
உத்தரபிரதேசத்தில் தற்போது உள்கட்டமைப்புப் பணிகளில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து துறைகளை காட்டிலும் கல்விக்கும், வளர்ச்சி திட்டங்களுக்குமே உபி அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கடந்த நான்கே ஆண்டுகளில் 1 லட்சத்து 21 ஆயிரம் கிராமங்களுக்கு முழுமையான மின்சார வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் சமீபகாலமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்து வரும் நடவடிக்கைகள், இந்தியாவையே திரும்பிப் பார்க்க செய்து வருகின்றன. குறிப்பாக, உபியில் மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்களும், கல்வி மேம்பாட்டு திட்டங்களும் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றுவேன் என முதல்வர் யோகி ஆதித்நயநாத் உறுதியளித்ததை செய்து காட்டும் வகையில் மாநில அரசு முழுவீச்சில் இயங்கி வருகிறது.

அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் தற்போது உள்கட்டமைப்புப் பணிகளில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. நடப்பாண்டு பட்ஜெட்டில் மற்ற அனைத்து துறைகளை காட்டிலும் கல்விக்கும், வளர்ச்சி திட்டங்களுக்குமே உபி அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டும் ரூ. 55,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏராளமான மெட்ரோ ரயில் திட்டங்களும், புதிய சாலை திட்டங்களும் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, உத்தரபிரதேசம் முழுவதும் மின்சார வசதியை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் உபியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 324 கிராமங்கள் முழுமையான மின்சார வசதியை பெற்றிருக்கின்றன. இதனை அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் ஏ.கே. சர்மா, சட்டமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் மீதமுள்ள 36,990 கிராமங்களுக்கு முழுமையான மின்சார வசதி செய்து தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
கிராமங்களை மின்மயமாக்கும் நடவடிக்கைகள் எந்தவித தொய்வும் இன்றி தினமும் நடந்துகொண்டே இருக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், மின்சார வசதி கிடைக்கப்பெற்ற கிராமங்களில் தொழிற்சாலைகளை நிறுவவும், அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications