Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உபியில் 6 ஆண்டுகளில் 10,000 என்கவுன்ட்டர்.. 63 ரவுடிகள் சுட்டுக்கொலை.. உபி அரசு வெளியிட்ட அறிக்கை

பெண்களை கேலி செய்பவர்களையும், பாலியல் தொல்லை அளிப்பவர்களையும் களையெடுப்பதற்காக தனிப் போலீஸ் பிரிவே உத்தரபிரதேசத்தில் உருவாக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழங்குக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், அவரது ஆட்சிக்காலத்தில் (6 ஆண்டுகளில்) இதுவரை 10,000 என்கவுன்ட்டர்கள் நடைபெற்றிருப்பதாக அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் முதல்வராக பதவியேற்றதுமே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார் யோகி ஆதித்யநாத். ஏனெனில், அதற்கு முன்பாக உத்தரபிரதேசத்தில் ரவுடிகளின் சாம்ராஜ்ஜியம் அதிக அளவில் இருந்தது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என குற்றங்கள் மலிந்து கிடந்தன. இதனிடையே, பெரும்பாலான ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் அரசியல் செல்வாக்கு அதிகம் இருந்ததால் போலீஸாரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வந்தனர்.

 10000 encounters in Uttar Pradesh Under CM Yogi Adityanath Regime says Government Report

இதனால் உத்தரபிரதேசம் என்றாலே சட்டம் ஒழுங்கு சீரற்ற மாநிலம் என்ற பிம்பம் அனைவரின் மனதிலும் பதிந்திருந்தது. இதன் காரணமாகவே, தான் முதல்வராக பதவியேற்றதும் சட்டம் ஒழுங்கு துறையை தன்வசப்படுத்தினார் யோகி ஆதித்யநாத். இதையடுத்து, ஒவ்வொரு குற்றச்செயல்களுக்கும் தனித்தனி போலீஸ் படையை அமைப்பது என்ற திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படுத்தினார்.

அதன்படி, பெண்களை கேலி செய்பவர்களையும், பாலியல் தொல்லை அளிப்பவர்களையும் களையெடுப்பதற்காக தனிப் போலீஸ் பிரிவே உத்தரபிரதேசத்தில் உருவாக்கப்பட்டது. அதேபோல, ரவுடிகளை கட்டுப்படுத்தவதற்காக போலீஸில் ஒரு பிரிவினர் பணியமர்த்தப்பட்டனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் உத்தரபிரதேசத்தில் குற்றச்சம்பவங்கள் கணிசமாக குறைந்து வருகின்றன.

இந்த சூழலில், யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரம் என்கவுன்ட்டர்கள் நடைபெற்றிருப்பதாக உபி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உபியில் கடந்த 2017 முதல் 2023 பிப்ரவரி மாதம் வரை போலீஸார் - கிரிமினல்கள் இடையே 10000 என்கவுன்ட்டர்கள் நடந்திருக்கின்றன. இதில் மீரட் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3,152 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. அதற்கு அடுத்தப்படியாக ஆக்ராவில் 1,844 என்கவுன்ட்டர்கள் நடந்திருக்கின்றன. இந்த சம்பவங்களில் 63 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் பயங்கர ரவுடிகளும், கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களும் அடங்குவர். அதே சமயத்தில், 3 போலீஸார் இந்த சம்பவங்களில் உயிரிழந்திருக்கிறார்கள். 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+