உடம்பெல்லாம் ப்ளூ கலராக மாறி.. 14 வயசுதான்.. கிளாஸ் ரூமிலேயே.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!
14 வயது சிறுமி கிளாஸ் ரூமிலேயே தற்கொலை செய்து கொண்டார்
லக்னோ: 14 வயசு பெண், தன்னுடைய கிளாஸ் ரூமிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. உடம்பெல்லாம் புளூ கலரில் இருந்ததாம்.. இந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உத்திரபிரதேசத்தின் மகேந்திரகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அவர்.. 10-ம் வகுப்பு படித்து வந்தார்.. கடந்த ஜூலை 3ம் தேதியன்று இந்த மாணவி தன் ஸ்கூலுக்கு போனார்.. அங்கே தன்னுடைய வகுப்பறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி கிளாஸ் ரூமில் பிணமாக தொங்குவதை பார்த்த பள்ளி நிர்வாகம் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான், வீட்டிலிருந்து கிளம்பி சென்ற மகள், திடீரென தூக்கில் கொண்டிருப்பதை பார்த்ததும், பெற்றோர் கதறி கதறி அழுதனர்.
பின்னர், வீட்டில் தங்கள் மகள் கிளம்பி வரும்போது, நல்லாதான் இருந்ததாகவும், ஸ்கூலுக்கு வந்த பிறகு யாரோ, மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்து விட்டனர் என்றும் குற்றஞ்சாட்டினர்.
ஆனால் பெற்றோரின் இந்த புகாரை பள்ளி நிர்வாகம் காதிலேயே வாங்கவில்லை என கூறப்படுகிறது.. மேலும், சில ஆவணங்களில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு, குடும்ப பிரச்சனையால் மாணவி தற்கொலை செய்ததாக கூறி போலீசார் உதவியுடன் அடக்கம் செய்து விட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், பள்ளி நிர்வாகம் தரப்பில் போலீசார் சொல்லும்போது, சிறுமி ஒரு தற்கொலை குறிப்பு எழுதி வைத்துள்ளாராம்.. அதில், தன் சாவுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல ,குடும்ப பிரச்சினையே காரணம் என்று எழுதியுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள் .
இதனால் அளவுக்கு அதிகமாக மன வேதனை அடைந்த பெற்றோர், முதல்வருக்கே நேரடியாக மனு அளித்துவிட்டனர்.. அதில், மகளின் சாவிலிருக்கும் மர்மத்தை கண்டறிய கோரி வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
இது பற்றி அப்பெண்ணின் அப்பா சொல்லும்போது, "மகள் தூக்கில் தொங்கியபோது தான் பார்த்தேன்.. உடம்பெல்லாம் புளூ கலரில் இருந்தது.. டிரஸ் எல்லாம் கிழிந்திருந்தது.. நாங்கள் ஏழை.. எங்களால் எந்த கோர்ட்-கேஸ்-க்கும் செலவு செய்ய முடியாது.. மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்" என்று கேட்டுள்ளார்..பெற்ற தந்தையின் இந்த கதறல் சோஷியல் மீடியாவில் வைரலாகியும் வருகிறது.
இப்போதுவரை மாணவி எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. வீட்டில் ஒரு காரணம், பள்ளியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. எனினும் முதல்வர் வரை விஷயம் சென்றிருப்பதால், விரைவில் உண்மை வெளிவரும் என்றே நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications
