Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 முறை துப்பாக்கிச்சூடு.. மோடியை எதிர்த்த மாஜி எம்பி ஆதிக் அகமது வீழ்ந்தது எப்படி? நிருபர் பகீர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேச முன்னாள் எம்பியும், ரவுடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும்போது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். அப்போது இருவரையும் கொல்ல வந்த கும்பல் 15 முதல் 20 முறை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்து மயிரிழையில் உயிர் தப்பிய பத்திரிகையாளர் பகீர் தகவலை கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் பகுதியை சேர்ந்தவர் ஆதிக் அகமது. இவரது சகோதரர் அஷ்ரப். இவர்கள் 2 பேர் மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர்களின் பெயர்கள் ரவுடி பட்டியலில் இணைக்கப்பட்டது. இதையடுத்து ஆதிக் அகமது அரசியலுக்குள் நுழைந்தார்.

15 to 20 times were fired and killed Athiq Ahmed, says journalist who escaped on spot

கடந்த 1989 முதல் 1993 வரை அலகாபாத் மேற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு சமாஜ்வாதி கட்சியில் இணைந்து 1996 தேர்தலில் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு அப்னாதளம் கட்சியில் இணைந்து 2002 தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு அவரால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

அதன்பிறகு சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்த அவர் 2004 நாடாளுமன்ற தேர்தலில் புல்பூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியானார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்த வாரணாசி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கியும் தோல்விடைய தழுவினார். அவர் வெறும் 855 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இதற்கிடையே தான் அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்தன. சுமார் 100க்கும் அதிகமான வழக்குள் அவருக்கு எதிராக இருந்தது. இதையடுத்து 2019 முதல் சிறையில் உள்ளார். இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ ராஜூ பால் கொலை வழக்கில் உமேஷ் பா என்பவர் முக்கிய சாட்சியாக இருந்தார். இவரை கடத்திய வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

15 to 20 times were fired and killed Athiq Ahmed, says journalist who escaped on spot

இதையடுத்து ஆதிக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப் முகமதுவையும் போலீசார் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மர்மகும்பல் அவர்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்றது.

ஆதிக் அகமதுவும், அவரது சகோதரரான அஷ்ரப்பும் மருத்துவமனைக்கு செல்லும்போது பத்திரிகையாளர்களிடம் பேசியபடியே சென்றனர். இந்த வேளையில் தான் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த வேளையில் சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் இருந்தனர்.

இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் கூறுகையில், ‛‛ஆதிக் அகமதுவும், அவரது சகோதரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்களை பேட்டி காண சென்றோம். அப்போது சிலர் அவர்கள் 2 பேர் மீதும் துப்பாக்கியால் சுட்டனர். ஆதிக் அகமது, அஷ்ரப் ஆகியோர் சரிந்து விழுந்து பலியாகினர். அவர்கள் 2 பேர் மீதும் 15 முதல் 20 ரவுண்டுகள் வரை துப்பா்கியால் சுட்டனர். சம்பவம் நடந்தபோது பத்திரிகையாளர் ஒருவர் என்னை கீழே தள்ளினார். இதனால் தான் நான் உயிர் தப்பினேன். இந்த சம்பவத்தால் பத்திரிகையாளர்களும் காயமடைந்தனர்'' என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தால் உத்தர பிரதேசத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பட்டுள்ளது. பொதுமக்களும், அரசியல் கட்சியினர் உள்பட அனைவரும் அனுமதியின்றி வெளியே கூடக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+