"இப்படி கூட சாவு வருமா!" நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
லக்னோ: நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டு இருந்த சிறுவன், திடீரென வெளியே வந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அது பகிர் கிளப்புவதாக இருக்கிறது. இந்தச் சம்பவம் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த வாழ்க்கையில் அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நன்றாகப் பேசிக் கொண்டு இருக்கும் நபர் கூட திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் பல நடந்துள்ளன.

இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. நீச்சல் குளத்தில் நீச்சலடித்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சிறுவன்: உத்தரப் பிரதேச மாநிலம் சிவல்காஸ் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் மீரட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சலுக்குச் சென்றுள்ளார். வழக்கம் போல ஜாலியாக அந்த சிறுவன் நீச்சலடித்து பயிற்சி பெற்று வந்துள்ளான். அப்போது நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த அந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது. அது பார்க்கவே பதற வைப்பதாக இருக்கிறது.
நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்ததும் அந்த சிறுவன் மயங்கி நிலையில், உடனடியாக அந்த சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். இருப்பினும், அங்குச் சிறுவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது: உயிரிழந்த அந்த சிறுவன் பெயர் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுவன் பள்ளியிலிருந்து வந்தவுடன் தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்திற்குச் சென்றுள்ளான். அங்கு அவர்கள் கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டுள்ளனர். பிறகு ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்துள்ளான். சில நொடிகள் நடந்து சென்ற அந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்தான்.
நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து சில அடிகள் கால் வைத்ததும் அந்த சிறுவன் மயங்கி விழுந்தான். இதையடுத்து உடனடியாக நீச்சல் குளத்தின் பாதுகாப்பிற்கு இருந்தவர். அந்த சிறுவனை எழுப்ப முயன்றுள்ளனர். இருப்பினும், அவன் எழவில்லை. இதையடுத்து அந்த சிறுவனை அருகே நிழலான பகுதிக்கு இழுத்துச் சென்றனர். அதற்குள் சிறுவனின் நண்பர்கள் அவரை சூழ்ந்து கொள்கிறார்கள். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
டாஸ்மாக் மதுவை விட கள்ளச்சாராயம் ஏன் ஆபத்து? உயிரை பறிக்கும் என தெரிந்தும் மக்கள் அதை குடிப்பது ஏன்?
உயிரிழப்பு: இதையடுத்து அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் உயிரிழப்பிற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதையடுத்து நீச்சல் குளம் பகுதி பொதுமக்களுக்கு மூடப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீச்சல் குளத்தின் மேலாளர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை தேடும் பணிகளும் நடந்து வருகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications