15 வயசு பிஞ்சுவை.. நாசம் செய்து..கோடாரியாலேயே வெட்டி.. நடுநடுங்க வைத்த காமுகர்கள்.. உ.பி. ஷாக்..!

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றுள்ளது ஒரு கும்பல்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: 15 வயது சிறுமியை நாசம் செய்ததுடன், கோடாரியாலேயே வெட்டி சாய்த்த கொடூரம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது..!

நாளுக்கு நாள் உத்தரபிரதேசத்தில் காமுகர்களின் அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. பெண் குழந்தைகளின் உயிர்களுக்கு பாதுகாப்பு இருப்பதில்லை.. பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்தபடியே வருகின்றன.

 15 year old girl raped and murdered by a gang in Uttar Pradesh

குறிப்பாக இந்த 2 வருடங்களில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட பிஞ்சுகள் ஏராளம்.. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் எத்தனையோ முறை பிரச்சனைகளை கிளப்பியும், யோகி அரசை மிக கடுமையாக விமர்சித்தும்கூட, இந்த அட்டூழியங்கள் அங்கு குறையவே இல்லை.. இப்போது இன்னொரு சம்பவமும் அங்கு நடந்து அம்மாநில மக்களை உறைய வைத்துள்ளது.

சித்ரகூட் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்த 15 வயது சிறுமி.. தன்னுடைய சொந்தக்காரரின் 4 வயது குழந்தையை அழைத்து கொண்டு வயல்வெளிக்கு சென்றார்.. அந்த வயலில்தான் சிறுமியின் அப்பா வேலை பார்க்கிறார்.. அவருக்கு சாப்பாடு தருவதற்காக சிறுமி சென்றிருக்கிறாள்.

அப்பாவுக்கு சாப்பாடு தந்துவிட்டு, மறுபடியும் அந்த குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது, திடீரென மர்ம நபர்கள் வழிமறித்தனர். அவர்களை பார்த்ததும் இருவருமே பயந்து போய் அலறினர்.. ஆனால், அந்த கும்பல், குழந்தையை மட்டும் அங்கிருந்து அடித்து விரட்டிவிட்டு, சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர்.. இறுதியில், ஒரு கோடாரியால் அந்த பெண்ணை வெட்டியும் சாய்த்தனர்.

இதனிடையே, கும்பலால் தாக்கப்பட்ட அந்த குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு சென்று, நடந்த சம்பவங்களை சொன்னாள்.. இதனால் பதறி போன குடும்பத்தினர், கிராம மக்களையே அழைத்து கொண்டு அந்த பகுதிக்கு சென்றனர்.. ஆனால், சிறுமியை காணவில்லை.. அதனால் அந்த பகுதி முழுக்க தேடியபோதுதான், சிறுமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்தனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்... ஆனால் இப்படி ஒரு கொடூரத்தை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை.. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+