அழிந்த சாம்ராஜ்ஜியம்.. உபி முன்னாள் எம்பி அதிக் கொலைக்கு காரணமான 2005 சம்பவம்! நடந்தது என்ன?
லக்னோ: பிரபல தாதாவும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் எம்பியுமான அதீக் அகமதுவும் அவரது சகோதரரும் உபியில் போலீசார் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில், அவரது இந்த வீழ்ச்சியின் தொடக்கப்புள்ளியாக கூறப்படுவது கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம்தான் என்கிறார்கள். அது என்ன சம்பவம்? விரிவாக பார்ப்போம்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராஜு பால். இவர் அதே 2005ல் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த பாதுகாவலரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய தாதா என்று கூறப்படும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அதிக் அகமதுதான் இதற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ராஜு பாலுடன் உள்ள முன் விரோதம் காரணமாக அவரை கொன்று விட்டதாக
அதிக் அகமது கூலிப் படையை ஏவி கொன்றதாக கூறப்பட்டது.
இந்த கொலைக்கு உமேஷ் பால் என்ற வழக்கறிஞர் முக்கிய சாட்சியாக இருந்தார். ராஜு பால் கொலையின் பின்னணியில் அதிக் அகமதுவே இருந்ததாக உறுதியாக அவர் தெரிவித்து வந்தார். சுமார் 20 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உமேஷ் பாலிடம் வாக்குமூலத்தை பெற போலீசார் திட்டமிட்டு இருந்தது.
அதற்கு முன்பாகவே உமேஷ் பால் மர்மமான முறையில் கொல்லப்பட்டது உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தின்போது அதிக் அகமது அலகாபாத் சிறையில் இருந்தார். ஆனால், அவருக்கு நெருக்கமான 5 முதல் 6 பேர் கொண்ட கும்பலை ஏவி உமேஷ் பாலை தீர்த்துக்கட்டியதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்தது.
உமேஷ் பால் கொலை வழக்கில் அதிக் அகமது, அவரது மனைவி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர் சைஸ்தா பர்வீன், அவரது மகன் ஆசாத் அகமது ஆகியோர் பெயர்களில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கடந்த பிப்ரவரி இறுதியில் உத்தரப்பிரதேச காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக பிரயாக்ராஜில் உள்ள அதீக் அகமதுவின் உறவினர் ஜாஃபர் அகமது வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிறகு அவரை காணவில்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர். அதிக் அகமது மனைவி மற்றும் மகனும் பங்களாவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில்தான் கடந்த 13 ஆம் தேதி அதிக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது ஜான்சியில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். முன்னாள் எம்பியின் மகனே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது அம்மாநிலம் மட்டுமே தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் பத்திரிகையாளர் வேடத்தில் வந்த 3 பேரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சுத்து மூஸ்வாலா கொலையின் பின்னணியில் இருந்த லாரன்ஸ் பிஸ்நோயின் வெறுப்பு பிரச்சாரங்களால் கவரப்பட்ட சன்னி சிங் என்பவர் தலைமையில் அருண் மௌரியா, லவ்லேஷ் திவாரி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இருவரையும் சுட்டுக்கொன்று இருக்கிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications