உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு செக்? நாடாளுமன்ற தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் ‛பக்காபிளான்’.. அடேங்கப்பா
லக்னோ: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு ‛செக்' வைக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் பாஜக ஆடிப்போய் உள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஹாட்ரிக் முறையில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கவனம் என்பது உத்தர பிரதேசத்தை நோக்கியே இருக்கும்.

இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையாகும். இந்தியாவிலேயே அதிக நாடாளுமன்ற தொகுதிகள் உத்தர பிரதேசத்தில் தான் உள்ளது. அங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சிக்கு மத்தியில் ஆட்சியமைக்க கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக 62 தொகுதிகளில் வென்றது. பாஜகவின் கூட்டணியில் இருந்த அப்னா தளம் (எஸ்) 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக்தளம்(ஆர்எல்டி) கூட்டணி அமைத்து இருந்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியில் ரேபரேலியில் மட்டும் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் கூட ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வீழ்த்தினார்.
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ‛செக்'வைக்கவும், தனது கட்சியை கூடுதல் இடங்களில் வெற்றி பெற வைக்க தேவையான பணிகளை அகிலேஷ் யாதவ் தொடங்கி உள்ளார். அதன்படி அகிலேஷ் யாதவ் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் வியூகத்தை வகுக்க திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக எம்பிக்களின் செயல்திறன் பற்றிய விபரங்களை அவர் சேகரிக்க தொடங்கியுள்ளார். கடந்த வாரம் லக்னோவில் நடந்த கட்சி கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் இதுதொடர்பாக மாவட்ட தலைவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். மேலும் சில கேள்விகள் அடங்கிய பட்டியலை கொடுத்து அதுபற்றிய விரிவான விபரங்களை சேகரித்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தொகுதியில் எம்பியாக இருப்பவரின் பெயர், கட்சி, தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சேகரித்து வழங்க கூறியுள்ளார். மேலும் பணவீக்கம், வேலையில்லாத திண்டாட்டத்துக்கு அப்பாற்பட்டு தொகுதியில் தற்போது மக்கள் எதிர்பார்க்கும் 5 முக்கிய விஷயங்கள் பற்றியும், ஒவ்வொரு தொகுதியில் சமாஜ்வாதி கட்சி பற்றி மக்களின் கருத்து என்னவாக இருக்கிறது? என்பது பற்றிய உண்மையை அறிக்கையாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே சமாஜ்வாடி கட்சியினர் வெற்றி பெற்றனர். தற்போது 3 எம்பிக்கள் மட்டுமே கட்சியில் உள்ளனர். இதனால் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்துக்கு அகிலேஷ் யாதவ் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இத்தகைய உத்தரவுகளை அவர் மாவட்ட தலைவர்களுக்கு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த தகவல்கள் என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கை வெளியிட கைக்கொடுக்கும். இதன்மூலம் மக்களின் மனங்களை வென்று நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் சாதிக்கலாம் என அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைய வாய்ப்புள்ளது. இது நடக்கும் பட்சத்தில் உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவது என்பது சமாஜ்வாதி கட்சிக்கு கூடுதல் பலத்தை வழங்கும். மேலும் அகிலேஷ் யாதவுக்கும் அதிகம் முக்கியத்துவம் கிடைக்கும். இதனால் தான் அவர் தற்போதே நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், ‛‛நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் துவங்கி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம். அவர்களிடம் சில விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது. அதன்படி தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்'' என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications