அம்மா இல்லாதபோது அரங்கேறிய கொடூரம்! அலறிய சிறுமி.. கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்.. உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 5 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் பகத்பூர் கிராமத்தில் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. குடும்பத்தில் தந்தை வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்று வருவர். அதேபோல தாய் கூலி வேலைக்காக காலை சென்றால் மாலைதான் வீடு திரும்புவார். இவர்களின் ஒரே மகளான 15 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். பெரும்பாலும் சிறுமியின் தாய் வேலைக்கு செல்லும் போது சிறுமியும் பள்ளிக்கு சென்றுவிடுவார்.
அதேபோல பள்ளி முடித்து சிறுமி சீக்கிரம் வீடு திரும்பி விடுவார். தாயர் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வருவார். சில நேரங்களில் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்த தந்தை வந்திருந்தால் ஒரிரு நாட்கள் முழு நேரமும் வீட்டிலேயே தங்கி இருப்பார். நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்திருந்த தந்தை கடந்த 20ம் தேதி மீண்டு வெளியூர் சென்றிருக்கிறார்.

குடும்ப சூழல்
எனவே தாயும் மகளும் மட்டும் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி மாணவிக்கு தலைவலி என்பதால் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. தாய் மட்டும் வேலைக்கு சென்றிருக்கிறார். இதனை கவனித்துள்ள உள்ளூர் வாசிகள் 5 பேர் சிறுமியை பிற்பகல் வரை கண்காணித்துள்ளனர். சிறுமி வீட்டை விட்டு எங்கும் போகாமல் இருந்திருக்கிறார். அப்போது பிற்பகலுக்கு பின்னர் இவர்களில் ஒருவர் சிறுமியின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். சிறுமி கதவை திறந்து என்ன விவரம் என கேட்டிருக்கிறார். ஏதோ சொல்ல வருவதை போல உள்ளே வந்த அந்த நபர் சிறுமியை நெருங்கி வந்துள்ளார்.

புகார்
சிறுமிக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த நபர் வீட்டின் அருகே மறைந்திருந்த தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிரடியாக வீட்டினுள் நுழைந்த 4 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். சிறுமி எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் கேட்காமல் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இதனை எதிர்த்து சிறுமி சத்தம் போட்டதால் இவர்கள் சிறுமியை தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் தப்பி சென்றுள்ளனர். அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய், தனது மகள் அலங்கோலமாக கிடப்பதை பார்த்து அலறியுள்ளார்.

கைது
பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இந்த குற்றத்தில் ஈடுபட்டது சிறுமிக்கு நன்கு பரிட்சயமானவர்கள்தான் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமி அடையாளம் காட்டியதன் அடிப்படையில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் இது போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.

கோரக்ப்பூர்
இந்த சம்பவத்தை போலவே கோரக்பூரில் 7ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது இவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை மேற்கொள்கையில் சிறுமியின் வீட்டின் மாடியில் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் சக குடியிருப்பாளர்கள் மீது சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது இவர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் இவர்களிடத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications