அமித் ஷா, எடியூரப்பா, ஆளுநர் புரோஹித்.. ஒரே நாளில் 5 விவிஐபிக்களுக்கு கொரோனா.. என்ன நடந்தது?

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் அடுத்தடுத்து 5 பெரிய அரசியல் தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: நேற்று ஒரே நாளில் இந்தியாவில் அடுத்தடுத்து 5 பெரிய அரசியல் தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது வேகம் எடுத்துள்ளது. சமுக பரவல் இன்னும் ஏற்படவில்லை என்று கூறினாலும் தொடர்ந்து கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியா இன்னும் தனது உச்சத்தை இதில் அடையவில்லை.

இந்தியாவில் தற்போது 1804855 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 38165 பேர் பலியாகி உள்ளனர்.

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று இந்தியாவின் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். லேசான அறிகுறியுடன் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குர்கானில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர்

அதேபோல் இன்னொரு பக்கம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாமல் ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மாளிகையில் மொத்தம் 95க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எடியூரப்பா

எடியூரப்பா

அதேபோல் இன்னொரு பக்கம் கர்நாடக மாநில பாஜக முதல்வர் எடியூரப்பா கொரோனா காரணமாக நேற்று பாதிப்படைந்தார். லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அதேபோல் எடியூரப்பாவின் மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் மணிப்பால் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

வேறு யார்

வேறு யார்

இது போக நேற்று உத்தரபிரதேசத்தை செர்ந்த நீர்வள துறை அமைச்சர் மஹேந்திர சிங் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு மிகவும் நெருக்கமான அமைச்சர் ஆவார் இவர். அதேபோல் உத்தர பிரதேச பாஜக தலைவர் ஸ்வந்தரா தேவ் சிங் கொரோனா காரணமாக நேற்று பாதிக்கப்பட்டார். இவரையும் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

கமல் ராணி

கமல் ராணி

அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமல் ராணி கொரோனா காரணமாக நேற்று பலியானார். கடந்த 18ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தீவிரமாக சிகிச்சை பெற்று வந்து இவர் நேற்று பலியானார். இவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கு மிகவும் நெருக்கமான தலைவர். தொடர்ச்சியாக பாஜக தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+