6 வயது சிறுமி.. சீரழித்து.. சிதைத்து கொன்ற 15, 12 வயசு அண்ணன்கள்.. தாயும் உடந்தையான கொடூரம்
6 வயது சிறுமியை நாசம் செய்து கொன்ற 2 அண்ணன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
லக்னோ: 6 வயது சிறுமியை அவளது அண்ணன்களே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த அண்ணன்களுக்கு வயது 15 மற்றும் 12.. அது மட்டுமில்லை.. அந்த சிறுமியை இந்த அண்ணன்களே சேர்ந்து கொலையும் செய்துள்ளனர். இந்த கொலையை மறைக்க உதவியது இவர்களை பெற்ற தாய்... இவ்வளவு பெரிய அக்கிரமம் நம்ம நாட்டிலதான் நடந்துள்ளது.
உத்திரபிரதேசத்தில் நடந்து வரும் அக்கிரமங்களுக்கு எல்லை இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. பழமை வாதத்தில் ஊறி போய் உள்ளது ஒரு புறம் என்றால், பாலியல் அராஜகம் கொஞ்ச நஞ்சம் இல்லை. இந்த சம்பவமும் அப்படித்தான்.
லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், 6 வயது சிறுமி.. அங்குள்ள ஸ்கூலில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். போன செவ்வாய்க்கிழமை அதாவது 20-ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. விளையாட போனவள் வீட்டுக்கு வராததால், குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

புகார்
அப்போதும் கிடைக்காததால், போலீசில் புகார் தந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பலாத்காரம்
விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு, ஸ்வீட் வாங்கி தருவதாக கூறி, அவளது 2 அண்ணன்களும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அவளை இருவருமே சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த குழந்தையின் கழுத்தை இருவரும் நெறித்து கொன்றுள்ளனர். மகன்கள் இருவருமே மகளின் கழுத்தை நெறித்து கொல்வதை இவர்களை பெற்ற தாய், நேரிலேயே கண்ணால் பார்த்தாராம்.

வாக்குமூலம்
அதனால் குழந்தையின் உடலை மறைப்பதற்கு இந்த தாயும் உடந்தையாக இருந்திருக்கிறார். இதை அவர் போலீசாரிடம் வாக்குமூலமாகவே தெரிவித்துள்ளார். 2 அண்ணன்களுக்கும் 15, 12 வயசாகிறது. தலித் சமூகத்தை சேர்ந்த பள்ளியில் படித்து வருகிறார்களாம். இப்போது 2 மகன்கள், தாய் என 3பேரையுமே போலீஸ் கைது செய்துள்ளது.

ஆத்திரம்
இப்படி சொந்த தங்கையையே, 15, 12 வயசு அண்ணன்கள் நாசம் செய்ததும், கழுத்தை நெறித்து கொன்றதும், அந்த கொலைக்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்ததும்.. மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications