முதலிரவு முடிந்ததும் போன உயிர்.. 35 வயது பெண்ணை திருமணம் செய்த 75 வயது நபருக்கு நேர்ந்த கதி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: மனைவி இறந்ததால் தனிமையில் வசித்து வந்த 75 வயது முதியவர் 35 வயது பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் இருவரின் திருமண வாழ்க்கை சில மணிநேரங்களில் முடிவுக்கு வந்தது. அதாவது முதலிரவு முடிந்த நிலையில் மறுநாள் காலையிலேயே அவர் திடீரென்று இறந்தார். என்ன நடந்தது? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

‛அறுபதிலும் ஆசை வரும்'.. இதனை கேட்டவுடன் பலரும் 60 வயதிலும் தாம்பத்திய உறவு வைக்க ஆசை வரும் என்பதை சொல்வதாக நினைக்கலாம். ஆனால் உண்மையில் "அறுபதிலும் ஆசை வரும்" என்று சொல்வதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

75-year-old-man-marries-35-year-old-and-dies-in-the-next-morning-after-the-first-night

உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியான ஆசைகளையும் இது குறிக்கும். முதுமையிலும் வாழ்வதற்கான விருப்பமும், சிறுவயதில் கிடைக்காத பலவற்றை அனுபவிக்க வேண்டும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் என பலவற்றை சேர்த்து தான் ‛அறுபதிலும் ஆசை வரும்' என்கிறார்கள்.

அந்த வகையில் தனிமையை போக்க 75 வயது முதியவருக்கு திருமண ஆசை வந்தது. அந்த முதியவர் 35 வயது பெண்ணை திருமணம் செய்து முதலிரவு முடிந்த பிறகு மறுநாள் காலையில் இறந்துள்ளார். அதாவது உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் குச்முச் கிராமத்தை சேர்ந்தவர் சங்ருராம் (வயது 75). திருமணமானவர். முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது. கணவன் - மனைவி மட்டுமே சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சங்ருராமுக்கு விவசாய நிலம் உள்ளது. விவசாயம் செய்து இருவரும் வாழ்ந்து வந்தனர். கடந்த ஆண்டு சங்ருராமின் மனைவி காலமானார். அவரது பிரிவை தாங்க முடியவில்லை. குழந்தைகள் இல்லாதது, சகோதர் டெல்லியில் வசிப்பது உள்ளிட்டவற்றால் அவர் தனிமையில் வாழ தொடங்கினார். தனிமை அவரை வாட்டி வதைத்தது.

இதனால் அவர் அடுத்ததாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அவர் உறவினர்களிடம் கூறினார். ஆனால் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‛‛வயது 75 ஆகிவிட்டது. இனி திருமணம் செய் வேண்டாம். அது நன்றாக இருக்காது'' என்று கூறினர். ஆனால் சங்ருராம் கேட்கவில்லை. திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அதோடு பெண் தேடினார். அப்போது ஜலால்பூரை சேர்ந்த 35 வயது நிரம்பி மன்பாவதி என்ற பெண், சங்ருராமை திருமணம் செய்ய முன்வந்தார். இந்த பெண்ணுக்கும் கணவர் இல்லை. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். ஏழை குடும்பத்தை சேர்ந்த அவர் தனது மகள்கள் மற்றும் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சங்ருராமை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து இருவரும் கடந்த 29ம் தேதி திருமணத்தை பதிவு செய்தனர். அதன்பிறகு அவர்களின் வழக்கப்படி கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதுபற்றி மணப்பெண் மன்பாவதி கூறுகையில், ‛‛எனது கணவர் குழந்தைகளை கவனித்து கொள்வார். நான் வீட்டு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று உறுதியளித்துள்ளார்'' என்றார். அதன்பிறகு அவர்களுக்கு முதலிரவு முடிவடைந்தது.

மறுநாள் காலையில் சங்ருராமின் உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் அவரது இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை. ஒரு தரப்பினர் அவரது மரணம் இயற்கையானது என்று கூறி வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினரோ அவரது மரணத்தில் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+