ஆன்லைன் காதலனை தேடி 3 குழந்தைகளுடன் இந்தியா வந்த வங்கதேச பெண்... நேரில் பார்த்தால் மேஜர் ட்விஸ்ட்
லக்னோ: வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் ஆன்லைன் மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். எப்படியாவது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என்று தனது 3 குழந்தைகளுடன் இந்தியாவிற்கு பறந்து வந்த வங்கதேச பெண், அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
காதலனை ஆப்லைனில் தேடுவதை விட ஆன்லைனில் தேடுவது இப்போது அதிகமாக உள்ளது. பெண்னோ ஆணோ அழகாக இருந்தால் போதும், பேஸ்புக்கில் பிரெண்ட ரெக்கஸ்ட் கொடுதது இன்ஸ்டாவில் சாட்டிங் செய்து, வாட்ஸ் அப்பில் வீடியோ கால் செய்து வாழ்க்கிறார்கள்.. கடைசியில் அசம்பாவிதங்கள் நடந்த பின் அலறுகிறார்கள்.

பெண்கள் என்றால் காதலனை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து வாழ்க்கைய தொலைக்கிறார்கள். ஆண்களோ, மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக போக்சோவில் உள்ளே போகிறார்கள். இப்படித்தான் தற்போது ஆன்லைன் காதல்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆன்லைன் காதல்கள் இப்போது எல்லாம் நாடு விட்டு நாடு என்கிற அளவிற்கு வந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவரை காதலிக்கும் பெண்கள், இந்தியாவிற்கு தேடி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அப்படித்தான் வங்கதேச பெண் ஒருவரும் வந்துள்ளார். அவருக்கு நடந்த ஏமாற்றத்தை விவரிக்கிறது இந்த செய்தி.
உத்தரபிரதேசத்தின் ஷரவஸ்தி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் பர்தா ரோஷன்கர் . இந்த ஊரில் பிறந்தவர் அப்துல் கரீம் வயத 27. இவர் பக்ரைன் நாட்டில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த சூழலில் அப்துல் கரீம் ஆன்லைன் மூலம் வங்காளதேச நாட்டை சேர்ந்த 32 வயதாகும் தில்ருபா ஷர்மி என்ற பெண்ணுடன் நட்பு பாராட்டி உள்ளார். இந்த பழக்கம் மெல்ல மெல்ல சாட்டிங் ஆக மாறி உள்ளது.
தில்ருபா ஷர்மிக்கு திருமணமாகி 15, 12 மற்றும் 7 வயதில் என மூன்று குழந்கைள் உள்ளனர். தில்ருபாவின் கணவர் கொரோனாவின் போது இறந்துவிட்டார். தற்போது 3 குழந்தைகளுடன் தில்ருபா தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்த சூழலில் தில்ருபாவுக்கு அப்துல் கரீமின் நட்பு புதுவிதமாக இருந்தள்ளது. அவரை ஒரு கட்டத்தில் தீவிரமாக காதலிக்க தொடங்கி உள்ளார். இருவரும் நேரில் பார்த்துக்கொள்ளாமல் ஆன்லைன் மூலமாக காதலை வளர்த்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி தில்ருபா ஷர்மி தனது 3 குழந்தைகளுடன் கடந்த மாதம் 26-ந் தேதி சுற்றுலா விசாவில் உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவுக்கு வந்திருக்கிறார். அதே நாளில் அப்துல் பக்ரைனில் இருந்து லக்னோ வந்தார். பின்னர் அவர்கள் 5 பேரும் ஓட்டலில் அறை எடுத்து 2 நாட்கள் தங்கி உள்ளார்கள்
அதனை தொடர்ந்து, அப்துல்கரீம், தில்ருபாஷர்மி மற்றும் அவரது குழந்தைகளை தனது சொந்த கிராமத்துக்கு அழைத்து சென்றார். அங்குதான் தில்ருபாவுக்கு பெரும் அதிர்ச்சியான விஷயத்தை அப்துல்கரீமின் கிராமத்தினர் தெரிவித்துள்ளார். அப்துல்கரீம் இதுவரை திருமணம் ஆகவில்லை என கூறி தில்ருபாஷர்மியுடன் பழகி வந்தது பொய் என்பதை அந்த கிராமத்தினர் தெரிவித்தனர்.
மேலும் அப்துல்கரீம் மனைவி மற்றும் கிராமத்தினருக்கு அப்துல் கரீம்-தில்ருபாஷர்மியின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து போலீசுக்கும் தகவல் கொடுத்தனர், அதன் பேரில் நேரில் வந்து அப்துல்கரீம், தில்ருபாஷர்மியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து தில்ருபாஷர்மி தனது நாட்டுக்கு திரும்பி செல்வதாக தெரிவித்தார். ஆன்லைன் காதலனை கரம் பிடிக்க ஆசையோடு வந்த பெண் ஏமாற்றத்துடன் வங்கதேசத்திற்கே திரும்பி சென்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications