ரொம்ப கோவக்காரரோ.. பாஜகவிற்கு கை தவறி வாக்களித்த இளைஞர்.. விரக்தியில் விரலை வெட்டிக்கொண்ட கொடூரம்
உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் தன்னுடைய விரலை வெட்டிக் கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் தன்னுடைய விரலை வெட்டிக் கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.
இந்த நிலையில் பாஜக வெறுப்பாளர் ஒருவர் அந்த கட்சியின் வேட்பாளருக்கு கை தவறி வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகுஜன் சமாஜ் தொண்டர்
அந்த இளைஞரின் பெயர் பவான் குமார் என்று தெரிய வந்துள்ளது. இவர் உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தீவிரமான தொண்டர். அந்த கட்சிக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்து இருக்கிறார்.

பாஜக வெறுப்பாளர்
இந்த நிலையில் நேற்று இவர் தேர்தலில் வாக்களிக்க சென்றார். பகுஜன் சமாஜ் வேட்பாளர் யோகேஷ் வெர்மாவிற்கு வாக்களிக்க அவர் வாக்குசாவடி சென்றுள்ளார். ஆனால் தவறுதலாக பாஜக வேட்பாளர் எம்.பி போலா சிங்கிற்கு வாக்களித்துள்ளார்.

தவறி போட்டார்
கை தவறி இவர் மாற்றி வாக்களித்துவிட்டார். இதனால் அங்கேயே ஓ என்று இவர் கத்தி கோஷமிட்டார். பின் வேகமாக கோபத்துடன் இவர் வீட்டிற்கு ஓடியுள்ளார். வீட்டில் சென்று தன் விரலை கத்தியால் வெட்டியுள்ளார்.
|
என்ன வீடியோ
வாக்களித்த விரலை மட்டும் கத்தியால் வெட்டி இருக்கிறார். அதன்பின் இவரது குடும்பத்தார் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த பரபரப்பான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications