என்ன பண்றது..இப்படி பண்ணாதான் ஸ்கூலுக்கே வர்றாங்க! நீச்சல் குளமாகிய க்ளாஸ் ரூம்! யூனிபார்முடன் ஜாலி!
லக்னோ: தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மாணவர்களை வகுப்புகளுக்கு வரவழைப்பதற்காக வகுப்பறையிலேயே நீச்சல் குளத்தை உருவாக்கி அதில் சீருடையுடன் மாணவர்களை குளிக்க வைத்து மகிழ வைத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள்..
இந்தியா முழுவதும் மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக வேலூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையானது கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். மேலும் வெளியிடங்களில் வேலை செய்வோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெயில்: இதனால் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவதால் தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. பல நாட்களுக்கு முன்பே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் ரம்ஜான் விடுமுறை காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு 23ஆம் தேதி முதல் கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை இருக்கும் என்பதால் அதுவரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
வித்தியாச முயற்சி: அதே நேரத்தில் உத்திரபிரதேசம் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் கோடை விடுமுறை அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தை விட அங்கு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. மேலும் தற்போது அங்கு அறுவடை காலம் என்பதால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வருகை சதவீதம் மிகக் கடுமையாக சரிந்துள்ளது. இதை அடுத்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும் வருகை பதிவை அதிகரித்துப்பதற்காகவும் ஆசிரியர்கள் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுனர்.

நீச்சல் குளமான வகுப்பறை: வெயில் காரணமாக வீட்டிலேயே இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களை நீச்சல் குளத்தில் குளிக்க வைத்திருக்கின்றனர். ஆனால் நீச்சல் குளம் தனியாக கட்டப்படவில்லை.. வகுப்பறையே நீச்சல் குளமாக மாற்றப்பட்டிருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் கண்ணுஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பள்ளி வகுப்பறையில் சுமார் இரண்டடி உயரத்திற்கு தண்ணீரை நிரப்பி அதில் மாணவர்களை விளையாட அனுமதித்திருக்கின்றனர் ஆசிரியர்கள். இதனால் கோடை வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்த குழந்தைகள் சிறிது நேரம் மகிழ்ச்சியாக அந்த சிறிய நீச்சல் குளத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.
வைரலாகும் வீடியோ: பள்ளி சீருடை உடன் அவர்கள் குளித்து மகிழும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாணவர்கள் வெயில் காரணமாக பள்ளிக்கு வருவதை தவிர்ப்பதாகவும் பெற்றோர்களும் அவர்களை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் பள்ளிக்கூடத்தை நீச்சல் குளதுமாக மாற்றி மாணவர்களின் வருகை பதிவேட்டை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் ஆசிரியர்கள்.












Click it and Unblock the Notifications