ஹரித்வார் வன்முறை பேச்சு பற்றி கேள்வி கேட்டா உ.பி. துணை முதல்வர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
லக்னோ: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் சாமியார்கள் ஒன்று கூடி வன்முறையை தூண்டும் வகையில் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதால் பிபிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியை உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சட்டென நிறுத்தியது சர்ச்சையாகி உள்ளது.
ஹரித்துவாரில் சாமியார்களின் சங்கமம் நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சாமியார்கள் பலரும் பகிரங்கமாக வன்முறையை தூண்டும் வகையில் பேசினர்.

இஸ்லாமியர்களை படுகொலை செய்ய வேண்டும்; இனச்சுத்திகரிப்பு செய்தாக வேண்டும் எனவும் பேசினர். ஹரித்வாரில் சாமியார்கள் இப்படி வன்முறைத்தனமாக பேசிய பேச்சுகள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பேச்சுகள் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா பிபிசி இந்தி சேவைக்கு வீடியோ பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது ஹரித்வார் சாமியார்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கேசவ் மவுரியா கூறியதாவது: நாங்கள் யாருக்கும் எங்களை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் மதத்தலைவர்கள் தங்களது கருத்துகளை பகிரங்கமாக பேசுவதற்கு உரிமை இருக்கிறது. இந்து சாமியார்கள் பேசுவதை கேள்வி கேட்கும் நீங்கள் கிறிஸ்தவ, இஸ்லாமியர் சமூகத் தலைவர்களின் பேச்சுகள் குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை.
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவதற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரில் இருந்து எத்தனை இந்துக்கள் வெளியேற்றப்பட்டனர்? அதை பற்றி ஏன் பேசுவது இல்லை? அதை பற்றி ஏன் கேள்வி எழுப்புவது இல்லை. ஹரித்வாரில் நடைபெற்றது பாஜகவின் நிகழ்ச்சியும் இல்லை. இந்து சாமியார்கள் அரசியல் இல்லாமல் தங்களது நம்பிக்கைகளை முன்வைத்து பேசி இருக்கின்றனர். அவர்களது பேச்சுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை.
தேசதுரோகம் என்பது வேறு விவகாரம். சூரிய நமஸ்காரம் செய்வதை எதிர்க்க அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்துக்கு என்ன உரிமை இருக்கிறது? ஹரித்வாரில் என்ன பேசினார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து கேள்வி கேட்டால் பதில் தருகிறேன். நீங்கள் ஒரு பத்திரிகையாளர் போல பேசவில்லையே.. ஒரு குறிப்பிட்ட கும்பலின் ஏஜெண்ட் போல பேசுகிறீர்களே? இவ்வாறு கேசவ் மவுரியா கூறினார். இதனைத் தொடர்ந்து காலர் மைக்கை கழற்றி வைத்துவிட்டு, வீடியோ பேட்டியை முழுமையாக டெலீட் செய்ய வேண்டும் என எச்சரித்தார். கேசவ் மவுரியாவின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications