பெட்ரோல் பங்க் போல சாராய பங்க்.. கலகலப்பு பாணியில் பூமிக்கு அடியில் கிணறு.. அடிபம்பில் அதிசயம்
லக்னோ: பெட்ரோல் பங்க் போல சாராய பங்க்கை உருவாக்கி உள்ளார்கள் மர்ம கும்பல்.. பூமிக்கு அடியில் நீர்தேக்க தொட்டி அமைத்து வெளியே அடி பம்பு ஒன்றை உருவாக்கி உள்ளே மதுவை சேமித்து வைத்துள்ளார்கள். குடம் குடமாக தொட்டியில் இருந்து மதுவை உத்தரப்பிரதேச போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மௌரானிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசாரியா தேராவில் சட்டவிரோத மதுபானம் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு கலால் துறை மற்றும் போலீசார் அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள்,

அங்கு போன அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பசாரியா தேராவில் உள்ள வீடுகள், வயல்வெளிகள், வயல்வெளிகள் என அனைத்து இடங்களிலும் சட்டவிரோத மதுபானங்கள் பெரிய அளவில் இருந்தது.. சோதனை முடிவில் எல்லா இடங்களிலும் சட்டவிரோத மதுபானங்களை மீட்டனர். இதனிடையே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு அடி பம்பு அங்கு இருந்தது. சம்பந்தமே இல்லாமல் அடிபம்பு இருக்கிறதே என்று அதனை அடித்து பார்த்தனர்.. அதில் தண்ணீருக்கு பதில் மது இருந்தது.
பெட்ரோல் பங்க் போல சாராய பங்க்கை உருவாக்கி இருந்திருக்கிறார்கள். எப்படி என்றால், பூமிக்கு அடியில் நீர்தேக்க தொட்டி அமைத்து வெளியே அடி பம்பு ஒன்றை உருவாக்கி உள்ளே மதுவை சேமித்து வைத்துள்ளார்கள். கலகலப்பு படத்தில் கிணற்றில் சாராயத்தை கலக்கி அதனை மோட்டார் போட்டு பம்பு செட்டில் விடுவார்.. அதேபோல் இதிலும், மோட்டார் பம்புக்கு பதில், அடி பம்ப் வைத்திருக்கிறார்கள்.
கலகலப்பு படத்தில் எப்படி தண்ணீருக்கு பதில் மதுபானம் வருமோ, அதுபோல் கை பம்பில் அடித்தால், தண்ணீருக்குப் பதிலாக மது வந்தது. இதனால் சோதனைக்கு வந்த கலால் துறையினர் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோத மதுபானம் மறைத்து வைக்கப்பட்டிருந்த விதத்தை கண்டு ஆச்சரியமடைந்தனர். சோதனை நடத்திய அதிகாரிகள், தொடர்ந்து அடிபம்பில் அடித்து மதுவை குடம் குடமாக சேகரித்து மீட்டனர். மேலும் புல்டோசர் உதவியுடன் சட்டவிரோத மதுபான ஆலைகளை இடித்து தள்ளினர்.
'शराबी हैंडपंप'
— Pravin Kumar Yadav (@PravinNews) November 7, 2023
मामला झांसी के मऊरानीपुर थाना क्षेत्र का है... pic.twitter.com/YO6EYRQQvD
சட்டவிரோத மதுபான ஆலைகளை நடத்தியவர்கள், சாராய பங்க்கை உருவாக்கியவர்கள் போலீசார் சோதனை நடத்த வரப்போவதை முன்கூட்டியே அறிந்து எஸ்கேப் ஆகிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்..
இந்த சம்பவம் தொடர்பாக ஜான்சி மாவட்டம் மௌரானிபூர் சப் கலெக்டர் கோபேஷ் திவாரி கூறுகையில், "பசாரியா தேராவில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதாக பல புகார்கள் வந்தன. அதன்பேரில், காவல் துறை மற்றும் கலால் துறையின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அங்கு சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கான பொருட்களையும் அழித்துள்ளோம்.சட்டவிரோதமாக மதுவை தயாரித்து சேமித்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications