உ.பியில் தட்டி தூக்கும் அகிலேஷ் யாதவ்.. சர்ரென அதிகரித்த வாக்கு சதவிகிதம்.. ஏபிபி - சி வோட்டர் சர்வே
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்கு சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக ஏபிபி - சி வோட்டர் நடத்திய சர்வே தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜக, சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என்ற நான்கு முனை போட்டி நிலவி வந்தாலும் பாஜக - சமாஜ்வாதி இடையிலான மோதல்தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மிக முக்கியமான போட்டியாளராக உருவெடுத்துள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஜாதி கட்சிகள்
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி சிறிய சிறிய ஜாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருகிறது. இதனால் அரசியல் களம் பெரிய அளவில் மாற்றம் அடைந்து வருகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் இதுவரை தேர்தல் களத்தில் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. இதனால் ஆதித்யநாத் vs அகிலேஷ் யாதவ் என்ற அளவில் தேர்தல் களம் மாறி உள்ளது.

பிரதமர்
பிரதமர் மோடி நேரடியாக உத்தர பிரதேச தேர்தலில் கவனம் செலுத்தி உள்ளார். இரண்டு முறை இதோடு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்குவதற்காக பிரதமர் மோடி உத்தர பிரதேசம் சென்றுவிட்டார். இனியும் 4 முறைக்கும் மேல் அவர் உத்தர பிரதேசம் செல்ல உள்ளார். தேர்தலில் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அவர் பல்வேறு கூட்டங்களை, நிகழ்ச்சிகளை உத்தர பிரதேசத்தில் நடத்த உள்ளார்.

கணிப்பு
இந்த நிலையில் உத்தர பிரதேச தேர்தல் குறித்து ஏபிபி சேனல் மற்றும் சி வோட்டர் இணைந்து சர்வே நடத்தி வருகிறது. கடந்த டிசம்பர் 4ம் தேதி செய்யப்பட்ட ஏபிபி - சி வோட்டர் சர்வேபடி, உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. அதன்படி பாஜக கூட்டணி 212-224 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது. அங்கு மொத்தம் 403 இடங்கள் உள்ளன. இதில் 40.4 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு செல்லும்.

இடங்கள்
கடந்த முறை இங்கு பாஜக 325 இடங்களை வென்றது. இங்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 151-163 இடங்களை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 12-24 இடங்களையும், காங்கிரஸ் 2-10 இடங்களையும் பெற வாய்ப்பு உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியாகியுள்ள சர்வே படி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி முந்தைய சர்வேவை விட அதிக வாக்கு சதவிகிதம் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சர்வே விவரம்
டிசம்பர் 4ல் நடத்தப்பட்ட சர்வேயில் சமாஜ்வாதி 33 சதவிகித வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டது. அகிலேஷ் யாதாவிற்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இது 34 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இரண்டு வாரத்தில் 1 சதவிகித வாக்கு உயர்ந்துள்ளதாக ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. மாறாக பாஜகவிற்கு 41ல் இருந்து 40 ஆக வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது.

புதிய சர்வே
புதிய சர்வேயின்படி உத்தர பிரதேசத்தில் கட்சிகளின் வாக்கு சதவிகிதம்
பாஜக+ 40%
சமாஜ்வாதி+ 34%
பகுஜன் சமாஜ் 13%
காங்கிரஸ் 7%
மற்றவை 7%
இதனால் பாஜகவிற்கு இப்போதும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருந்தாலும் கடந்த தேர்தலை விட இந்த முறை குறைவான இடங்களிலேயே அக்கட்சி வெல்லும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications