பாஜக சிறிய தலைவர் சிறிய பொய்களைச் சொல்கிறார்.. "உயரமான" தலைவர் மிகப்பெரிய பொய் சொல்கிறார் - அகிலேஷ்
லக்னோ : உத்திர பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலான இது சாதாரண சட்டசபை தேர்தல் அல்ல எனவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும் உத்தரபிரதேசத்தின் தலைவிதியை மாற்றவும் நடத்தப்படும் தேர்தல் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏற்கனவே 3 கட்ட வாக்குப் பதிவு உ.பி.யில் முடிவடைந்துள்ளது.
முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப் பதிவு சஹாரான்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

உத்திர பிரதேச தேர்தல்
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 3வது கட்ட தேர்தல் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. கசன்கஞ்ச், இடா, ஹத்ராஸ், பிரோசாபாத், மணிப்பூரி, பரூக்பாத், கணுஞ், எட்டுவா, ஹவ்ரிவா, கான்பூர் தெகத், ஹம்பூரிபூர், ஜலுன், மகோபா, ஜான்சி, லலித்பூர், கான்பூர்நகர் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அந்த பகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

தீவிர பிரச்சாரம்
அடுத்ததாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள அம்மாநிலத்தில் பிரச்சாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளரும் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அகிலேஷ் யாதவ்
இந்நிலையில் யமுனாபர் கர்ச்சனா சட்டமன்றத் தொகுதியில் உள்ள பிர்பூரில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் உரையாற்றிய சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ் , "இது சாதாரண சட்டசபை தேர்தல் அல்ல, ஜனநாயகத்தை காப்பாற்றவும் உத்தரபிரதேசத்தின் தலைவிதியை மாற்றவும் நடத்தப்படும் தேர்தல் எனவும், சமாஜவாதி கட்சியின் தேர்தல் அறிக்கையை செயல்படுத்த நாங்கள் பாடுபடுவோம். பாஜக அரசு வந்ததில் இருந்து பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்துள்ளது." எனப் பேசினார்.

பாஜக தலைவர்களை கிண்டல்
மேலும் பாஜக தலைவர்களை கிண்டல் செய்த உத்தரபிரதேச முன்னாள் முதல்வரான அகிலேஷ், பாஜகவின் சிறிய தலைவர்கள் சிறிய பொய்களைச் சொல்கிறார்கள், பெரியவர்கள் பெரிய பொய்களைச் சொல்கிறார்கள் எனவும், "உயரமான" தலைவர்கள் மிகப்பெரிய பொய்களைச் சொல்கிறார்கள் என்றார். தொடர்ந்து பிரச்சாரத்தில் பங்கேற்ர பி.எட். மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு போட்டி மாணவர்களிடம் பேசிய அவர், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதா இல்லையா, தாள் வெளிவந்ததா இல்லையா என்பதை நீங்களே சொல்லுங்கள் எனவும், கல்வித்துறையில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதாகவும் சமாஜ்வாடி கட்சி உறுதியளிக்கிறது என்றார்.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!












Click it and Unblock the Notifications