Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலாத்காரம் செய்த பெண்ணை மணந்தால்.. குற்றவாளிக்கு ஜாமீன்.. உ.பி நீதிமன்றத்தில் தொடரும் அவலம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பாலியல் பலாத்கார குற்றங்களின் கீழ் சிறையில் உள்ள குற்றவாளிக்கு சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் வழங்கியதற்கான காரணம் பலரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பல்வேறு செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. அதாவது, பாதிக்கப்பட்டவரை குற்றவாளி திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்த நிலையில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக 5 பேருக்கு அலகாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

 பாலியல் குற்றங்கள்

பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் பாலியல் குறங்கள் அதிகம் நடைபெறும் முதல் 5 மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் 56,083 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் பலாத்காரம் தொடர்பாக 2,845 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மட்டுமல்லாது, கடத்தல், தாக்குதல், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றம் ஆகியவையும் இம்மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களில் தெரிய வந்திருக்கிறது.

சர்ச்சை

சர்ச்சை

இந்நிலையில் லக்கிம்பூர் கெரி பகுதியில் கடந்த மார்ச் மாதம் இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடத்தி சென்றிருக்கிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிறுமிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் குற்றவாளிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

திருமணம்

அதாவது, குற்றவாளி ஜாமீனில் வெளிவந்தவுடன் அடுத்த 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இது கடந்த வாரம் நடந்த சம்பவம். ஆனால் இதேபோல பல வழக்குகளில் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதேபோல கடந்த 30ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்று நடைபெற்றது. அதாவது கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றவாளி மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

போக்சோ வழக்கு

போக்சோ வழக்கு

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் 30ம் தேதி நடைபெற்ற விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வார் எனில் ஜாமீன் வழங்கலாம் என்று நீதிபதி கூறினார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் 28ம் தேதியன்று மற்றொரு வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது. ரேபரேலி காவல்துறையினரால் குற்றம்சாட்டப்பட்ட சூரஜ் பாலின் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவர் மீது போக்சோ மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஜாமீன்

ஜாமீன்

இவருக்கு ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த மனுதான் கடந்த செப்டம்பர் 28ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையில், குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "பாதிக்கப்பட்டவர் தற்போது மைனர் இல்லை. அவருக்கு 18 வயது பூர்த்தியாகியுள்ளது. மட்டுமல்லாது குற்றவாளி பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். எனவே ஜாமீன் வேண்டும்" என்று கோரியுள்ளார். இது குறித்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில், குற்றவாளியின் வழக்கறிஞர் கூறியதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குவது பொருத்தமாக இருக்கும் எனக்கூறி ஜாமீன் வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தீர்ப்பும் கருத்தும்

தீர்ப்பும் கருத்தும்

இதேபோன்று அடுத்தடுத்து இரண்டு வழக்குகளிலும் குற்றவாளி பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனை பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகள் அனைவரும் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களாவார்கள். மேலும் இந்த தீர்ப்பை வழங்கியது நீதிபதி தினேஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்த நபர் பாதிக்கப்பட்டவருக்கு திருமணம் செய்து வைப்பதை மகளிர் அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், பெண்களை சொத்துடமையாக அதாவது ஒரு பொருளாக பார்க்கும் மனப்பான்மை ஏற்பட்டுவிடும் என்றும் அவர்கள் விவரித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+