காற்றில் பறந்த விதிமுறைகள்.. மாஸ்க்குகளைகூட அணியாமல்.. மதகுரு இறுதி சடங்கில் கூடிய ஆயிரக்கணக்கானோர்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் மத குருவின் இறுதிச் சடங்கிற்கு ஆயிரக் கணக்கானோர் ஒரே இடத்தில் ஒன்றுகூடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 3.48 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், பதிவு செய்யப்படும் கொரோனா பாதிப்பைவிட உண்மையான கொரோனா பாதிப்பு 5 முதல் 10 மடங்கு வரை அதிகமாக இருக்கும் என்றே இந்திய மருத்துவ கழகம் உள்ளிட்ட வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

மதகுரு
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் மத குருவின் இறுதிச் சடங்கிற்கு ஆயிரக் கணக்கானோர் ஒரே இடத்தில் ஒன்றுகூடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பதாபூன் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீத் முகமது சலீமுல் காத்ரி உயிரிழந்துள்ளார்.

மாஸ்க்குகளை கூட அணியவில்லை
அதைத் தொடர்ந்து அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியுள்ளனர். கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல், மாஸ்க்குகளைகூட அணியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது சட்டப் பிரிவு 188 மற்றும் 144 விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு போலீசார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
|
நடவடிக்கை இல்லை
இதையடுத்து இந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மதகுரு உயிரிழந்ததால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவார்கள் என்பது போலீசாருக்கு தெரிந்திருந்தும் அதைத் தடுக்க எவ்வித நடவடிக்கைகளையும் போலீசார் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications