திருமண விழாவில் ரகளையில் ஈடுபட்ட யானை.. மணப்பந்தலை பந்தாடியது.. தெறித்து ஓடிய மணமகன்.. வைரல் வீடியோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண விழாவில் ரகளையில் ஈடுபட்ட யானை அங்கிருந்த கார்களை சேதப்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாஜ் மாவட்டம் ஆம்பலாப்பூர் கிராமத்தில் கடந்த ஜூன் 11-ம் தேதி திருமண விழா நடந்தது.
அந்த திருமண விழாவில் மணமக்களை ஊர்வலமாக அழைத்து செலவதற்காக யானை ஒன்று கொண்டு வரப்பட்டது.

வைலண்டாக மாறிய யானை
மணமகன் ஆனந்த் திரிபாதி யானை மீது அமர்ந்து திருமணம் நடக்கும் இடம் நோக்கி வந்தார். மேள தாளம் முழங்க ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் மணமகன். திருமணம் நடக்கும் இடத்தை வந்தடைந்ததும் அங்கு மணமகனை வரவேற்பதற்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த வெடிச் சத்தம் கேட்டதும் சைலண்டாக இருந்த யானை வைலண்டாக மாறியது.

தெறித்து ஓடிய மணமகன்
திடீரென உச்சக்கட்ட கோபத்துக்கு சென்ற யானை அங்கிருந்த 2 கார்கள் உள்ளிட்ட வாகனங்களை தூக்கி பந்தாடியது. இதனால் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் பொதுமக்கள் பீதி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். மணமகனும் பதறியடித்துக் கொண்டு ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.

சமாதானம் அடைந்தது
யானையின் மீது அமர்ந்துள்ள பாகன் அதனை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் அதனை ஏற்க மறுக்கும் யானை பிளறியபடி அங்கும் இங்கும் ஓடுகிறது. துதிக்கையில் கிடைப்பதை எல்லாம் தூக்கி வீசுகிறது. திருமண பந்தலையும் துவம்சம் செய்கிறது. கடைசியில் ஒருவழியாக பாகன் செய்த முயற்சியால் யானை சமாதானம் அடைகிறது.

மறக்க முடியாத நாள்
ஆனால் யானை செய்த ரகளையால் உற்றார், உறவினர்களுடன் கலகலப்பாக இருந்த திருமண விழா ஒரு சில நிமிடத்தில் அப்படியே தலைகீழாக மாறி விட்டது. மணமகன் ஆனந்த் திரிபாதிக்கு இந்த கல்யாணம் மறக்க முடியாத நாளாக மாறி விட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications