புருஷனுக்கும் தெரியாமல் பாகிஸ்தானுக்கு எஸ்கேப்.. டமால் ஆன அஞ்சுவின் காதல் டூர்.. தந்தை பரபரப்பு பேட்டி
லக்னோ: அஞ்சுவுக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்தது என்றும் இதனால் அடிக்கடி விசித்திரமான தன்மைகளை செய்து வந்தவர் என்றும் அதனால் தான் பேஸ்புக் நண்பரை காண அவர் பாகிஸ்தானுக்கு போய் உள்ளார் என்றும் பெண்ணின் தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.
உத்தரபிரதேசம் மாநிலம் கைலோர் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் அஞ்சுவுக்கு கல்யாணம் எல்லாம் ஆகிவிட்டது. அரவிந்த் குமார் என்பவருடன் கல்யாணம் நடந்து அவருக்கும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அரவிந்த் குமார் அஞ்சு தம்பதி ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள்.

அஞ்சுவின் வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் பேஸ்புக் மூலமாக வினை வந்தது. அஞ்சுவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (29) என்ற இளைஞருக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நண்பர்களாக மாறி ஆன்லைனிலேயே காதல் செய்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அஞ்சுவுக்கு காதலன் நஸ்ருல்லாவை நேரில் சந்தித்தே ஆக வேண்டும் என்று விரும்பி உள்ளார். இதற்காக அவர் செய்த வேலை தான் மிகப்பெரியது. குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல் பேஸ்புக் நண்பரை பார்க்க முறைப்படி பாகிஸ்தானுக்கு சுற்றுலா செல்ல விசா கேட்டு விண்ணப்பித்தார். பாகிஸ்தான் செல்ல சுற்றுலா விசா அஞ்சுவிற்கு கிடைத்தது. இதையடுத்து சுற்றுலா விசாவில் விமானம் ஏறி பாகிஸ்தானுக்கு அஞ்சு பறந்துவிட்டார்.
இந்தியாவில் அவரது கணவர் அரவிந்த்குமார் மற்றும் குழந்தைகள் அஞ்சுவின் செயலால் அரண்டு போனார்கள். அஞ்சு எப்போது வருவார் என தெரியாமல் தவிப்புடன் காத்துக்கிடக்கிறார்கள். இந்நிலையில் விஷயத்தை கேள்விப்பட்டு பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் நஸ்ருல்லாவிடம் விசாரித்துள்ளார்கள். அப்போது அவர், அஞ்சுவை மணக்கும் எண்ணம் எனக்கு இல்லவே இல்லை என்று மறுத்துவிட்டார். அத்துடன் அஞ்சுவின் ஒரு மாத கால விசா முடிந்ததும் அவர் இந்தியா திரும்பி விடுவார் என போலீசிடம் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தேகன்பூர் நகரில் வசிக்கும் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸிடம் சென்று செய்தியாளர்கள் நடந்த சம்பவத்தை கூறி பேட்டி கேட்டுள்ளனர்.
அப்போது பேட்டி அளித்த அஞ்சுவின் தந்தை, அஞ்சு யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்று உள்ளார். இது பெரிய தவறு. அவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவள் எப்போது பாகிஸ்தான் சென்றாள் என்றே இப்போதுவரை எனக்கு தெரியாது.












Click it and Unblock the Notifications