உ.பி. வளர்ச்சி குறியீடுகளில் பரேலி மாவட்டம் முதலிடம்.. முதல்வர் யோகியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
லக்னோ: உத்தரபிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீடுகளில் பரேலி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது நேரடி கண்காணிப்பின் கீழ் பரேலியை கொண்டு வந்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஒருகாலத்தில் மிகவும் பின்தங்கியிருந்த பிராந்தியமாக இருந்த பரேலி, தற்போது கல்வி, சுகாதாரம் என அனைத்து குறியீடுகளிலும் முன்னிலையில் இருப்பது அங்குள்ள மக்களுக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது.
இதனிடையே, பரேலியை போல மேலும் சில பின்தங்கிய மாவட்டங்களை தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர போவதாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சூளுரைத்த யோகி ஆதித்யநாத்
இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது. இந்நிலையில், முதல்வர் யோகி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக வளர்ச்சிப் பாதையை நோக்கி உத்தரபிரதேசம் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தை நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றிக் காட்டுகிறேன் என சூளுரைத்தார்.

தனித்தனியாக பிரித்து..
அதன் தொடர்ச்சியாக, உத்தரபிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்வதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகள் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார் யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேசம் மிகப்பெரிய மாநிலம் என்பதால், சில பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்படுவதை உணர்ந்த யோகி ஆதித்யநாத், மாநிலத்தை தனித்தனி பிராந்தியங்களாக பிரித்து ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவிட்டார்.

முதல்வர் நேரடி கண்காணிப்பு
இந்நிலையில், உபியில் பின்தங்கிய பகுதியாக இருந்த பரேலியை தனது நேரடி கண்காணிப்பில் யோகி கொண்டு வந்தார். அங்கு அரசின் திட்டங்கள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என அவர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, அரசு அதிகாரிகளும் அங்கு முழுவீச்சில் இறங்கி பணியாற்றினர். மற்ற மாவட்டங்களிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு உபி முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில், அனைத்து பிராந்தியங்களையும் விட பரேலி பகுதி எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதலிடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

பரேலி முதலிடம்
பரேலியில் விவசாயிகளின் மின்சார செலவை குறைப்பதற்காக 976 சோலார் நீர் பாசன பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுதவிர, 8 லட்சத்து 27 ஆயிரத்து 109 விவசாயிகளுக்கு பயிர் விளைவித்தல் குறித்த ஆலோசனைகள் நிபுணர்களால் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. பசு பாதுகாப்பு திட்டத்தின் கழ் 61,383 கால்நடைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், அங்கு 496 சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை எளிய மக்கள் அங்கு இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல பல நடவடிக்கைகளை அரசு எடுத்திருப்பதால் அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் பரேலி முதலிடத்தை பெற்றிருக்கிறது. பரேலிக்கு அடுத்ததாக சஹாரன்பூர், வாரணாசி, லக்னோ, மீரட் ஆகிய பகுதிகளும் வளர்ச்சிக் குறியீடுகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications