என்னங்க இது? பாஜகவிற்கு அடிமேல் அடி.. ராமர் கோவில் உள்ள அயோத்தி பைசாபாத்திலேயே தோல்வி!
லக்னோ; உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவில் கட்டப்பட்ட பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்துள்ளது. சமாஜ்வாதி வேட்பாளர் ஆவதேஷ் பிரசாத் 554289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். லல்லு சிங் பாஜக சார்பாக 499722 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 54567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இதில் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 71 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் 2019 தேர்தலில் போட்டியிடவில்லை. சமாஜ்வாதி 5 இடங்களில் வென்றது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் வென்றது.

2024 லோக்சபா தேர்தல்: 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை அனைத்து ஏழு கட்டங்களில் நடந்தது.அங்கே பாஜக, அப்னா தளம், லோக் தளம் போன்ற கட்சிகள் கூட்டணி வைத்தன.
எதிரே காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்தன. பகுஜன் சமாஜ் தனியாக போட்டியிட்டது.
தோல்வி முகம்; உத்தர பிரதேசத்தில் மாபெரும் அரசியல் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கே பாஜகவை முந்திய இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸின் இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி உள்ளது. பாஜக கூட்டணி 35 இடங்களுக்கு சென்று உள்ளது.
அங்கே மிக மோசமான தோல்வியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவில் கட்டப்பட்ட பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடையும் நிலையில் உள்ளது.
அங்கே வாக்கு சதவிகித ரீதியாகவும் பாஜக படுதோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து திடுக்கிடும் வாக்குப் சதவிகிதங்கள் வெளியாகி வருகின்றன. - பாஜக+: 44.12% (பாஜக: 42.13%), இந்தியா: 42.7% (சமாஜ்வாதி: 31.98%, காங்கிரஸ்: 10.64%), பகுஜன் சமாஜ் கட்சி: 9.2%. ஆகிய வாக்குகளை பெற்று உள்ளன.
இந்தியா இங்கே மிக அதிக அளவில் வாக்குகளை பெற்று உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் அயோத்தி கோவில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி முகம் கண்டுள்ளது.
சமாஜ்வாதி வேட்பாளர் ஆவதேஷ் பிரசாத் 554289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். லல்லு சிங் பாஜக சார்பாக 499722 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 54567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார்.
ராமர் கோவில்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார். இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டது.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோவில் கட்டுமானம் தங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்று பாஜக கருதியது. ஆனால் அந்த கோவில் உள்ள தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications