உபி தேர்தல்.. யாதவர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் பாஜக முன்னிலை! ஓ இது தான் காரணமா
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், யாதவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளிலும் பாஜகவே அதிகப்படியான இடங்களில் முன்னிலையில் உள்ளது.
Recommended Video
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் என்றாலும் கூட இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது உத்தரப் பிரதேசம் தான.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டது. ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க இங்கு 202 இடங்களில் வெல்ல வேண்டும்.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பொருத்தவரை பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் போட்டி! இவை தவிரப் பகுஜன் சமாஜ், காங்கிரஸ், மஜ்லிஸ் உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கின. மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த பல தேர்தல்களில் இதுவரை எந்தக் கட்சியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது இல்லை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அகிலேஷ் யாதவ்
உபி-இல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா நேரடியாக உபி சென்று அகிலாஷ் யாதவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதேபோல அங்குள்ள ஜாட்கள் உள்ளிட்ட முக்கிய சாதி கட்சிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு பெரிய கூட்டணியை அகிலேஷ் அமைத்தார். இதன் காரணமாகவே எக்ஸிட் போல் முடிவுகள் என்ன கூறினாலும் ஆட்சியை அமைக்கப் போவது தாங்கள் தான் என்று நம்பிக்கையுடன் கூறினார் அகிலேஷ் யாதவ்!

யாதவ் மக்கள் அதிகம் உள்ள இடங்கள்
இந்நிலையில், தற்போது வரை வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகள் உத்தரப் பிரதேசத்தில் counter polarization ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. உ.பி-இல் மொத்தம் 143 தொகுதிகளில் யாதவ் மக்கள் தொகை அதிகம். அதிகம் என்றால் 50% இல்லை. இந்தத் தொகுதிகளில் யாதவ் மக்கள் தொகை குறைந்தது 20% இருக்கும். 20% என்பது இது தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடியது. ஆனால், யாதவ் மக்கள் தொகை அதிகம் தொகுதிகளிலும் பாஜகவே அதிகம் முன்னிலை பெற்றுள்ளது. அங்கு 70க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவே முன்னிலையில் உள்ளது. 40 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

இஸ்லாமியர்கள்
அதேபோல குறைந்தது 20% முஸ்லீம் வாக்காளர்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ள 113 தொகுதிகளில் பாஜக 73 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி வெறும் 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. உபி மாநிலத்தில் counter polarization நடந்துள்ளதையே இது காட்டுகிறது. அதாவது யாதவ் அதிகம் உள்ள தொகுதிகளில் பிற சமூகத்தினர் அனைவரும் சமாஜ்வாதிக்கு எதிராகத் திரும்பி பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் பிற சமூகத்தினர் பாஜக பக்கம் சென்றுள்ளனர்.

ஜாட் மக்கள்
ஜாட் விவசாயிகள் அதிகம் உள்ள மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஜாட் சமூகத்தின் கட்சியாக அறியப்படும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியுடன் அகிலேஷ் கூட்டணி அமைத்தார். கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டமும் பாஜகவுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அதைத் தாண்டி, ஜாட் மக்கள் அதிகம் உள்ள 43 இடங்களில் பாஜக குறைந்தது 25 தொகுதிகளில் முன்னிலை, சமாஜ்வாதி கூட்டணியால் 10 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.

counter polarization
கொரோனாவை கையாண்ட விதம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் வரும் என சமாஜ்வாதி கட்சியினர் பெரிதும் நம்பிய நிலையில், அது நடக்கவில்லை. உபி மக்கள் மீண்டும் பிரதமர் மோடி- முதல்வர் யோகி ஆத்தியநாத்தின் பாஜகவிற்கே வாக்களித்துள்ளனர். அற்கு முக்கிய காரணமாக இந்த counter polarization இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications