இது லிஸ்ட்லயே இல்லயே.. 6 வருஷம்.. 6 நாட்கள்.. அடுத்த லெவல் கொண்டாட்டத்திற்கு ரெடியாகும் யோகி அரசு
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று 6 ஆண்டுகள் 6 நாட்கள் நிறைவு விழாவை சிறப்பாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், இம்மாநிலத்தில் தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்கிற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்றிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பான விழாவை சிறப்பாக கொண்டாட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 312 இடங்களை வென்று பாஜக ஆட்சியமைத்தது. அதற்கு முன்னர் இருந்த வாக்கு சதவிகிதத்தை விட இந்த முறை பெற்ற வாக்குகள் எண்ணிக்கை அபரிமிதமானது. வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும் மாநிலத்தில் மாற்றம் வரும்தான். ஆனால் இந்த அளவுக்கு வாக்குகள் வித்தியாசத்தில் வந்திருக்கக்கூட மாற்றமானது ஏறத்தாழ எதிர்க்கட்சி என்கிற ஒன்றையே இல்லாமல் செய்துவிடும் அளவுக்கு பெரியதாக பேசப்பட்டது.

இதெல்லாம் சும்மா யூகத்தில் வந்த வெற்றி என எதிர்க்கட்சியினர் வழக்கம் போல தங்கள் புலம்பலை தொடங்கினர். இப்படி இருக்கையில், இரண்டாவது சட்டப்பேரவை தேர்தல் 2022ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலிலும் பாஜக தனிப்பெரும்பான்மையான இடங்களை வென்று ஆட்சியமைத்தது. இதனை எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கவில்லை. யூகத்தில் வந்த ஆட்சி என விமர்சித்த இவர்கள், பாஜகவின் நடவடிக்கைகளை தவறாக எடைப்போட்டுவிட்டனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
அந்த வகையில் தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராக பணியாற்றி வரும் யோகி ஆதித்யநாத், பல புதிய சட்டங்களை இயற்றி அவற்றை முறையாக அமல்படுத்த செய்து காட்டியிருக்கிறார். இதனால் மக்கள் மத்தியில் பாஜகவுக்கான ஆதரவு தொடர்ந்து நீடித்து வருகிறது. இது மட்டுமல்லாது தற்போது ஒரு பெரிய நிகழ்வுக்காக தயாராகி வருகிறது உத்தரப் பிரதேச பாஜக. அதாவது உத்தரப் பிரதேச மாநில வரலாற்றில் இத்தனை நாட்கள் யாரும் தொடர்ந்து முதலமைச்சராக பணியாற்றியதில்லை. கடைசியாக காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சரான டாக்டர் சம்பூர்ணானந்த் 1954ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டு வரை என 5 ஆண்டுகள் 345 நாட்கள் வரை முதலமைச்சராக பொறுப்பு வகித்திருந்தார்.

தற்போது மார்ச் 1ம் தேதி நிலவரப்படி உத்தரப் பிரதேச மாநிலத்தின் அதிக நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்கிற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்றிருக்கிறார். அதாவது இவர் முதலமைச்சராக பொறுப்பேற்று மார்ச் 1ம் தேதியுடன் 5 ஆண்டுகள் 346 நாட்கள் நிறைவடைந்துள்ளன. வரும் 25ம் தேதியும் யோகி பதவியேற்று 6 ஆண்டுகள் 6 நாட்கள் வரை ஆகிறது. எனவே இதனை சிறப்பாக கொண்டாட உத்தரப் பிரதேச பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி மாவட்ட தலைநகரங்களில் யோகி அரசின் சாதனைகளை முன்னிறுத்தி பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.
மார்ச் 25ம் தேதியன்று லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறார். இதில் துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், பாஜக மாநிலத் தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி, மாநில பொதுச் செயலாளர் (அமைப்பு) தரம்பால் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இனி ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து யோகி ஆதித்யநாத் விரிவாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications