Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஐயோ.. என் கையை பிடிச்சிட்டாரே".. மணமகன் செயலால் திருமணத்தை நிறுத்திய பெண்! உ.பி.யில் 'பரபர' சம்பவம்

மணமகளின் கையை பிடித்து இழுத்த ஆதேஷ், முழங்காலிட்டு வழக்கமாக 'ப்ரப்போஸ்' செய்யும் போஸுக்கு ட்ரை செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: திருமணத்தின் போது தனது கையை பிடித்து மணமகன் இழுத்ததால் கடுப்பான மணமகள், மேடையிலேயே தனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் எனக் கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டில் திருமணத்தின் போது நடக்கும் கலாட்டாக்களுக்கு பஞ்சமே கிடையாது. அதிலும் வட மாநிலங்களில் இதுபோன்ற கலாட்டாக்கள் அதிக அளவில் நடைபெறும். மணமகன் தாமதமாக வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்; மணமகனின் நண்பர்கள் குத்தாட்டம் போட்டதால் திருமணத்தை நிறுத்திய மணமகளின் பெற்றோர் என்பன போன்ற செய்திகளை நாம் அன்றாடம் பார்த்திருப்போம்.

அதுபோன்ற ஒரு சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் தற்போது நடந்திருக்கிறது. மணமகன் உற்சாகமிகுதியில் செய்த காரியம் அவரது திருமண வாழ்க்கைக்கே வேட்டு வைத்துவிட்டது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

பெற்றோர் நிச்சயித்த திருமணம்

பெற்றோர் நிச்சயித்த திருமணம்

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் மாவட்டத்தில் உள்ள ரஸைனி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதேஷ் (31). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஜஸ்ரானா கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமாரி என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமானது. அதனைத் தொடர்ந்து, இருவரும் செல்போனில் பேசியும், அவ்வப்போது வெளியே சென்றும் வந்தனர்.

மணமகன் உற்சாக டான்ஸ்

மணமகன் உற்சாக டான்ஸ்

இந்நிலையில், அவர்களின் திருமணம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு அன்றைய தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரம்மாண்ட மேடை, இசை நிகழ்ச்சி என ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டிருந்தன. மேடைக்கு முதலில் வந்த மணமகன் தனது நண்பர்களுடன் ஜாலியாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார். பின்னர் மணமகளை அவரது தோழிகள் மேடைக்கு அழைத்து வந்தனர்.

கையை பிடித்து இழுத்த மணமகன்

கையை பிடித்து இழுத்த மணமகன்

மணமகளை பார்த்ததும் உற்சாகமான மணமகன் ஆதேஷ், அவர் அருகே சென்று கெத்தாக நடனம் ஆடினார். பின்னர், மணமகளின் கையை பிடித்து இழுத்த ஆதேஷ், முழங்காலிட்டு வழக்கமாக 'ப்ரப்போஸ்' செய்யும் போஸுக்கு ட்ரை செய்துள்ளார். ஆனால், யார் கெட்ட நேரமோ தெரியவில்லை.. ஆதேஷ் மணமகளின் கையை பிடித்து வேகமாக இழுத்து முழங்கால் போடவும், மணமகள் மேடையில் இருந்து கீழே எகிறி விழவும் நேரம் சரியாக இருந்தது.

நின்றது திருமணம்

நின்றது திருமணம்

அவ்வளவுதான்.. பாட்டும் கூத்துமாக இருந்த திருமண வீடே ஒரு நிமிடம் கப்சிப் ஆனது. அனைவரின் முன்னிலையிலும் மேடையில் இருந்து விழுந்ததால் அவமானம் அடைந்த மணமகள், தனக்கு இந்த மாப்பிள்ளையே வேண்டாம் என்று கூறி அங்கிருந்து விறுவிறு என வெளியே நடந்து சென்றார். மணமகனின் இந்த செயலால் பெண் வீட்டாரும் கோபம் அடைந்து மாப்பிள்ளை வீட்டாருடன் சண்டை போட்டனர். மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவு பேசி பார்த்தும் சமாதானம் அடையாத பெண் வீட்டார், திருமணத்தை நிறுத்துவதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+