உ.பி. லக்னோ ஏர்போர்ட்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தரையில் அமர்ந்து போராட்டம்- திடீர் பரபரப்பு!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்துக்குள் தம்மை நுழையவிடாமல் தடுத்ததைக் கண்டித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
உ.பி. லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 3 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. லக்கிம்பூர் விவசாயிகளை சந்திக்க சென்ற அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர்.

பிரியங்கா கைது
லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அவர் தடுப்பு காவலில் அடைத்து வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து தமிழகம் உட்பட நாடு முழுவ்தும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அகிலேஷ் தடுத்து நிறுத்தம்
அதேபோல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்கிம்பூர் செல்வதைத் தடுத்து வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து சமாஜ்வாதி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அகிலேஷ் யாதவ் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

பாஜகவை அகற்றுவோம்- அகிலேஷ்
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது; உ.பி.யில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் சமாஜ்வாதி கட்சியினர் விஜய் யாத்திரை நடத்த உள்ளோம். குற்றவாளிகளை நீதியின் முன்பாக ஆளும் பா.ஜ.க. அரசு முன்னிறுத்தும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. இந்த பாஜகவை அதிகாரத்தில் இருந்து விவசாயிகள் தூக்கி எறிய வேண்டிய தருணம் இது. மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன், வன்முறை நடைபெற்ற இடத்தில்தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களாக வீடியோக்கள் இருக்கின்றன. மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜிஸ் மிஸ்ரா நீடிக்கும் வரை எப்படி போலீசாரால் அவரது வீட்டுக்குள் நுழையும் முடியும்? ஆகையால் அஜிஸ் மிஸ்ரா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

ஏர்போர்ட்டில் பூபேஷ் பாகல் போராட்டம்
இந்நிலையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், உத்தரப்பிரதேசம் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் உ.பி. அரசோ, லக்கிம்பூர் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என நேற்றே திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று லக்னோ விமான நிலையத்துக்கு பூபேஷ் பாகல் வருகை தந்தார். இருப்பினும் அவரை உ.பி..க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் லக்னோ விமான நிலையத்திலேயே தரையிலேயே அமர்ந்து பூபேஷ் பாகல் போராட்டம் நடத்தினார். அப்போது பேசிய பூபேஷ் பாகல், கைது செய்யப்பட்ட பிரியங்காவை சந்திக்க அனுமதி மறுக்கிறது உ.பி. பாஜக அரசு என குற்றம் சாட்டினார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications