குழந்தை தொழிலாளர்கள் என்கிற பேச்சுக்கே இடமில்லை! கறார் காட்டும் யோகி ஆதித்யநாத்.. வேற லெவலில் உ.பி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குழந்தை தொழிலாளர்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதில் பாஜக அரசு உறுதியாக இருப்பதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தில் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்ததில்லை. ஆனால் யோகி இந்த சாதனையை முறியடித்து 6 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். இதனை கொண்டாடும் விதமாக மாநில அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் முக்கியமான திட்டம்தான் 'பால் ஷ்ராமிக் வித்யா யோஜனா'. இது குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

தற்போது வரை உத்தரப் பிரதேசம் முழுவதும் 20 மாவட்டங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் 2,000 குழந்தைகள் பலனடைந்துள்ளனர். 8 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் அதிக அளவில் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையை மாற்ற மாநில அரசும் ஏராளமான முயற்சிகளை எடுத்தது. ஆனால் எதுவும் நினைத்த அளவுக்கு பலனளிக்கவில்லை என்பதால் அதிரடியாக 'பால் ஷ்ராமிக் வித்யா யோஜனா' திட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர்களாக கண்டறியப்படும் சிறார்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.2,200 வரவு வகைக்கபடும். இந்த சிறார்கள் 8,9 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியடையும்போது அவர்களது அக்கவுண்ட்டில் கூடுதலாக ரூ.6,000ஐ அரசு டெபாசிட் செய்யும். இந்நிலையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள 75 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 சிறார்கள் குழந்தை தொழிலாளர் எனும் நிலையிலிருந்து மீட்கப்படுவார்கள்.
இது தவிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளை மேம்படுத்த தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் 880 அரசு தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளை மேம்படுத்த முதற் கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 4,000 அபியுதயா கூட்டுப் பள்ளிகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு தரமான கல்வியை உறுதி செய்யும்.
ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சுமார் ரூ.1.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நிஜமாகவே மிகப்பெரிய தொகையாகும். அதேபோல 704 பள்ளிகள் அடுத்தக்கட்டத்திற்கு தரம் உயர்த்தப்படுகின்றன. தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளதுபடி குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது. ஆனால் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் ஒவ்வொரு நடுநிலை பள்ளிகளிலும் சுமார் 450 மாணவர்கள் பயிலும் அளவுக்கு பள்ளிகள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த கல்வி கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications