பாஜக ஆட்சியில் உ.பியின் இடைநிலை கல்வி வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் தற்போது சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் 15 நாட்களில் தேர்வை நடத்தி, 14 நாட்களில் முடிவுகளை அறிவித்துள்ளது. இது அம்மாநில வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்ற மாணவிகளுக்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்தார். இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர்,

Chief Minister Yogi Adityanath has said that the Uttar Pradesh Board of Secondary Education has been improved

"இடைநிலைக் கல்வி வாரியம் தற்போது புதிய சாதனையை படைத்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தேர்வுகள் விரைவாக நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் விரைவாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாநிலத்தின் கல்வி தரம் என்பது மிகவும் மோசமானதாக இருந்தது. குறிப்பாக சமாஜ்வாதி கட்சியில் கல்வி தரத்தின் மீது பலரும் சந்தேகத்தை எழுப்பியிருந்தனர்.

தேர்வுகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றன. இந்த முறைகேடுகள் அனைத்தும் இடைநிலைக் கல்வி வாரியத்தின் அனுமதியோடுதான் அரங்கேறியது. தேர்வுகளை பொறுத்த அளவில் குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நடத்தப்பட்டது. அதேபோல முடிவுகளும் வெளியாக 2-3 மாதங்கள் வரை ஆகும். இதனால் ஏராளமான மாணவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நிலைமை முற்றிலுமாக மாற்றப்பட்டது.

மேலும், தேர்வில் முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. போதிய அளவில் ஆசியர்கள், ஊழியர்கள் இல்லாததே இந்த பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாகும். ஆசிரியர் நியமனத்திற்கு குறிப்பிட்ட அளவில் லஞ்சமாக பணமும் பெறப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் இந்த ஊழலை ஒழித்தோம். மட்டுமல்லாது தேவையான ஆசிரியர்களையும் உடனடியாக நியமித்தோம்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+