திட்டமிட்ட முயற்சிகளால் முன்னணி மாநிலமாக மாறிய உத்தரப் பிரதேசம்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: ஒரு காலத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக இருந்த உத்தரப் பிரதேசம், திட்டமிட்ட முயற்சிகளால் முன்னணி மாநிலமாக மாறியுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் பரமேஸ்வரன் ஐயர் தலைமையிலான குழுவை வரவேற்றுப் பேசிய ஆதித்யநாத் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "NITI ஆயோக்கின் சமீபத்திய புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, கடந்த ஆறு ஆண்டுகளில் 55 மில்லியன் மக்களை வறுமைக் கோட்டிலிருந்து வெளியே கொண்டு வருவதில் உத்தரப் பிரதேசம் வெற்றி பெற்றுள்ளது. வரம்பற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு மாநிலமாகும், மேலும் உலக வங்கியுடனான அதன் தொடர்பு மாநிலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

மாநிலம் முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும், பிரதமர் மோடியின் தலைமையையும் உலக வங்கி பாராட்டியுள்ளது. உலக வங்கியின் நோக்கம் எப்போதும் வறுமை ஒழிப்புதான், ஆனால் இப்போது சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை எப்போதோ உத்தரப் பிரதேச அரசு தொடங்கிவிட்டது. மாநில பறவைகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியிருந்தோம்.
இந்த திட்டங்கள் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப உயிர்களை பாதுகாப்பது என்பதுதான் எங்கள் முதன்மையான நோக்கம். மாநிலத்தின் குடிமக்களுக்கு எப்படி எல்லா விஷயங்களையும் நாங்கள் பார்த்து பார்த்து செய்கிறோமோ, அந்த வகையில் வன உயிர்களை பாதுகாக்கவும் இந்த அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கோடைக்காலங்களில் காட்டு உயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதேபோல காட்டுத்தீயை முற்றிலும் ஒழிக்க முயன்றிருக்கிறோம்.
வனப்பகுதியில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளை நாங்கள் மிக உறுதியாக தடுத்திருக்கிறோம். நாடு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு காடும் முக்கியம். எனவே இதை பாதுகாப்பதில் எந்த சமரசத்தையும் நாங்கள் செய்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications