'செம'...! கால்நடைகளை பராமரிக்க புதிய திட்டம்.. விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொல்லும் உ.பி அரசு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கால்நடை விலங்குகளை பராமரிக்கும் நோக்கில் சுமார் 520 நடமாடும் கால்நடை மருத்துவ யூனிட்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சியமைத்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 6 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் யோகி அதித்யநாத் அறிவித்திருக்கிறார். அதேபோல இதற்கு முன்னர் இம்மாநிலத்தில் முதலமைச்சராக பணியாற்றியவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. இந்த சாதனையை யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். எனவே இதனை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது.

Chief Minister Yogi Adityanath inaugurates mobile veterinary units to care for cattle in Uttar Pradesh

நலத்திட்டங்களை தொடக்கி வைத்தல், புதிய திட்டங்களை அறிவித்தல், முடிவு பெற்ற நலத்திடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தல் என பாஜக அரசு இந்த 6 ஆண்டு சாதனை கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக நேற்று(மார்ச் 26) நடமாடும் கால்நடை மருத்துவ யூனிட்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார். அவர் முன்னிலையில் மாநிலம் முழுவதும் உள்ள 75 மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த திட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் விவசாயிகள் மற்றும் விவசாய கால்நடைகளுக்கு உதவும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மாநிலம் முழுவதும் பசு பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள தெருக்களில் சுமார் 12 லட்சம் பசுக்கள் இருக்கின்றன. இவற்றை 6,600 பசு பாதுகாப்பு மையங்கள் பராமரித்து வருகின்றன. அதேபோல நமது அரசு ஒவ்வொரு பசுவுக்கும் சுமார் ரூ.900-ஐ பராமரிப்பு செலவுக்காக வழங்குகிறது. மட்டுமல்லாது பசுவை அடிப்படையாக கொண்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் மாநில அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் விவசாயிகள் மற்றும் விவசாய கால்நடைகளுக்கு உதவும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மாநிலம் முழுவதும் பசு பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள தெருக்களில் சுமார் 12 லட்சம் பசுக்கள் இருக்கின்றன. இவற்றை 6,600 பசு பாதுகாப்பு மையங்கள் பராமரித்து வருகின்றன. அதேபோல நமது அரசு ஒவ்வொரு பசுவுக்கும் சுமார் ரூ.900-ஐ பாராமரிப்பு செலவுக்காக வழங்குகிறது. மட்டுமல்லாது பசுவை அடிப்படையாக கொண்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் மாநில அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

இப்படி இருக்கையில்தான் பசு சானத்திலிருந்து பெயின்ட் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த முயற்சிக்கு நாங்கள் உத்வேகம் கொடுப்போம். இவ்வளவு திட்டங்களுக்கு மத்தியில்தான் தற்போது நடமாடும் கால்நடை மருத்துவ மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தொலை தூரத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தை சரியாக பயன்படுத்தினால் இனி வரும் நாட்களில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரும் என்பதில் சந்தேகமில்லை. பசுக்களுக்கு பரவும் லம்பி நோயை கட்டுப்படுத்துவது ஒரு காலத்தில் சவாலானதாக இருந்தது. ஆனால் தற்போது இது முழுமையாக கட்டுக்குள் வந்திருக்கிறது. இந்த நடமாடும் மருத்துவ சேவை என்பது முழுக்க முழுக்க இலவசமானது என்பது குறிப்பிடத்தக்கது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+