கொரோனாவுக்கு பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகள்.. மாதந்தோறும் ரூ.4000 நிதியுதவி.. உ.பி. அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
லக்னோ: கொரோனாவுக்கு பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.4000 நிதயுதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச அரசு வெளியிட்ட அறிவிப்பு அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நலனுக்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படுத்தி வருகிறார். மேலும், உத்தரபிரதேச அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும், மாநிலத்தின் கடைக்கோடி நபரையும் சென்றடைய வேண்டும் என முதல்வர் யோகி சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அதேபோல, ஏழைகளின் மருத்துவ சிகிச்சை செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த சூழலில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது, அந்த பிள்ளைகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குவது என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு பெற்றோரை பறிகொடுத்து வாடும் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, தாய் தந்தையர் இருவரையும் பறிகொடுத்த பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ரூ.4000 நிதியுதவி வழங்கப்படும். தாய் அல்லது தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் 4000 வீரர்களுக்கு இலவசமாக அவரவர் சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். நாளை (மார்ச் 6) இந்த நிதியதவி மற்றும் விளையாட்டு உபகரணங்களை கோரக்பூரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்க இருக்கிறார். மேலும், கோரக்பூரில் உள்ள ஜங்கில் கவுரியா மற்றும் சார்கவான் பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் தீவிர சிகிச்சை பிரிவுகளையும் (ஐசியு) முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கவுள்ளதாக உபி அரசு தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications